இராக்கதன் திரைப்பட விமர்சனம் : மாடலிங் துறையின் கருப்பு பக்கங்களை வெளிச்சம் போட்டும் காட்டுகிறது இராக்கதன் | ரேட்டிங்: 2/5

0
296

இராக்கதன் திரைப்பட விமர்சனம் : மாடலிங் துறையின் கருப்பு பக்கங்களை வெளிச்சம் போட்டும் காட்டுகிறது இராக்கதன் | ரேட்டிங்: 2/5

மருதம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.ஜி.பாஸ்கர் மற்றும் ராணி ஹென்றி சாமுவேல் தயாரிப்பில் இளம் இயக்குனர் தினேஷ் கலைசெல்வன் இயக்கிய திரைப்படம் இராக்கதன்.

இதில் வம்சி கிருஷ்ணா, ரியாஸ் கான், விக்னேஷ் பாஸ்கர், தினேஷ் கலைச்செல்வன்,  நிழல்கள் ரவி, காயத்ரி ரேமா , சஞ்சனா சிங், சாம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-மானஸ் பாபு ஒளிப்பதிவு, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு, பிரவீன் குமார் இசை, பாடல்கள் பாபு கிறிஸ்டியன் மற்றும் இயக்குனர் தினேஷ் கலைசெல்வன், இன்ப பிரகாஷ் கலைப் படைப்பு,ஸ்டண்ட் இயக்குனர் சரவெடி சரவணன், தண்டாயுதபாணி கிரியேட்டிவ் தயாரிப்பாளர், பிஆர்ஒ நிதிஷ் ஸ்ரீராம், ஜான் நரேஷ்.

அர்ஜூன், அலெக்ஸ், அனன்யா மூவரும் சிறு வயது முதலே நண்பர்கள். இதில் அர்ஜூனும் அனன்யாவும் காதலிக்கிறார்கள். அர்ஜூன் மாடலாக வேண்டும் என்பதே கனவு லட்சியமாக இருக்கிறார். இவரின் லட்சியம் நிறைவேறாமல் போக தனது சகோதரியின் திருமணத்திற்காக முடிந்த வேலைகளை செய்தாலும் நாட்டமில்லாமல் இருக்கிறார். இதனிடையே மாடலிங் பயிற்சி அளிக்கும் ஏஜேன்சியில் அழைப்பு வர மகிழ்ச்சியாக சென்னைக்கு பயணமாகிறார்.அங்கே ஏஜென்சி மேனேஜர்ஆஸ்டின் அர்ஜூனை பயிற்சிக்கு சேர்த்துக் கொள்கிறார். அதன் பின்னர் மாடலிங் துறையில் நுழைய பல சிக்கல்களையும், எதிர்ப்புகளையும், சமரசங்களும் கையாள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். சென்னையில் அர்ஜூனை பார்ப்பதற்காக அலெக்ஸ் மற்றும் அனன்யா ஏஜென்சிக்கு வருகின்றனர். ஆனால் அர்ஜூனை பார்க்க முடியாமல் தவிக்கும் அனன்யாவை ஹோட்டல் அறைக்கு அனுப்பி விட்டு அலெக்ஸ் அர்ஜூனை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று உள்ளே செல்கிறார். மறு நாள் காலையில் அர்ஜூன்,ஆஸ்டின் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்க, அலெக்ஸ் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். இந்த கொலைகளை விசாரிக்க இன்ஸ்பெக்டர் அஜ்மல் நியமிக்கப்படுகிறார். இவரின் தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அர்ஜூனைப் பற்றியும், ஆஸ்டினைப்பற்றியும் தெரிந்து கொள்கிறார். மாடலிங் பயிற்சியில் என்ன நடந்தது? அஜ்மல் தெரிந்து கொண்ட ரகசிய தகவல்கள் என்ன? எதற்காக அர்ஜூன் கொலை செய்யப்பட்டார்? ஆஸ்டினின் உண்மையான முகம் என்ன? கொலைக்கான காரணம் என்ன? அலெக்ஸ் உயிர் பிழைத்தாரா? நண்பனை கொன்றவர்களை பழி வாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் விக்னேஷ் பாஸ்கர்  இயல்பாக நடித்திருக்கிறார்.  வாட்டசாட்டமான உடல்வாகும், கிளுகிளுப்புக் காட்சிகளுக்காக தராளமாய் காட்டியிருக்கும் கவர்ச்சியான உடற்கட்டு என வில்லங்கமான வேடத்தில் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார் சஞ்சனா சிங். மாறுபட்ட வேடத்தில் மாடலிங் நிறுவனம் நடத்துபவராக நடித்திருக்கும் ரியாஸ் கான்,  நேர்மையான காவல்துறை அதிகாரியாகபோலீஸ் அதிகாரியாக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணா, நாயகனின் நண்பனாக இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன், நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, நிழல்கள் ரவி, சாம்ஸ் என அனைவரும் நேர்த்தியான நடிப்பை கொடுத்துள்ளார்கள்.

மானஸ் பாபுவின் ஒளிப்பதிவு, பிரவீன் குமாரின் பின்னணி இசை கதையோட்டத்துக்கு பலம் சேர்த்திருக்கின்றன!

வெளி உலவிற்கு தெரியாத மாடலிங் துறையின் கருப்பு பக்கங்களை, ஆண் விபச்சாரத்தை ஆண் விபச்சாரத்தை மையப்படுத்தி ஒரு ஆண் தனது குடும்பத்திற்காகவும், தனது கனவிற்காகவும் எதிர்கொள்ளும் துன்பங்களை அழுத்தமாக திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன்.

மொத்தத்தில் மாடலிங் துறையின் கருப்பு பக்கங்களை வெளிச்சம் போட்டும் காட்டுகிறது இராக்கதன்.