அரியவன் விமர்சனம்: அரியவன் அநீதிக்கு எதிராக பெண்கள் ஒற்றுமையாக இருந்தால் முடியாதது எதுவுமில்லை என்பதை அறிய செய்தவன் | ரேட்டிங்: 3.5/5

0
782

அரியவன் விமர்சனம்: அரியவன் அநீதிக்கு எதிராக பெண்கள் ஒற்றுமையாக இருந்தால் முடியாதது எதுவுமில்லை என்பதை அறிய செய்தவன் | ரேட்டிங்: 3.5/5

எம்ஜிபி மாஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் அரியவன் படத்தில் புதுமுகம் இஷான், ப்ரணாலி, டேனியல் பாலாஜி, சத்யன், சூப்பர் குட் சுப்ரமணி, ரமா, ரவி, வெங்கட்ராமன், கல்கி ராஜா, நிஷ்மா செங்கப்பா, ரமேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் மித்ரன் ஆர் ஜவஹர்.ஒளிப்பதிவு-கே.எஸ்.விஷ்;ணு!ஸ்ரீ, எடிட்டிங்-எம்.தியாகராஜன், இசை- ஜேம்ஸ் வசந்தன், வேத்ஷங்கர், கிரி நந்த், தயாரிப்பு மேற்பார்வை-அறந்தை பாலா, தயாரிப்பு நிர்வாகி-ரமேஷ் சக்கரவர்த்தி, துணை தயாரிப்பு நிர்வாகி-அன்பு, கதை-மாரிசெல்வன், வசனம்-ஜெகஜீவன், மாரிசெல்வன், உடை-சிவா, மீனாட்சி ஸ்ரீதரன், ஒப்பனை-எம்.என்.பாலாஜி, சஞ்சு, விவேக், நிதின், கலை-பாலுமகேந்திரா, சண்டை-மகேஷ் மாத்யூ, நடனம்-அசோக் ராஜா, எம்.ஷெரிஃப், பிஆர்ஒ-சதீஷ் குமார்- சிவா (ஏய்ம்)

அனாதைப் பெண்ணான மித்ராவும்(ப்ரணாலி), கபடி விiளாயாட்டு வீரரான ஜீவாவும்(இஷான்) காதலிக்கின்றனர். மித்ராவின் தோழி ஜெஸ்ஸி காதலனால் ஏமாற்றப்பட்டு, மிரட்டப்பட்டு, மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொல்ல முயற்சிக்கிறார். தக்க சமயத்தில் அவளை காப்பாற்றும் மித்ரா, தன் காதலன் ஜீவாவுடன் சேர்ந்து ஜெஸ்ஸியின் காதலன் பப்பூவை தேடிச் செல்கின்றனர். அங்கே ரவுடிகளுடன் ஏற்படும் சண்டையில் ஜீவா, பப்பூவின் கையை வெட்டி விட்டு அனைவரும் தப்பித்து முக்கிய ஆதரங்களையும் எடுத்துச் செல்கின்றனர். பப்பூ பிரபல ரவுடி துறைப்பாண்டி(டேனியல் பாலாஜி) தம்பி என்பதால் ஜீவாவை பழி தீர்க்க ரவுடிகள் களமிறங்குகின்றனர். துறைப்பாண்டியின் அடியாட்கள் ஜீவாவிடமிருந்து ஆதாரங்களை கைப்பற்றினார்களா?  கொலை வெறியுடன் திரியும் துறைப்பாண்டி போடும் திட்டம் என்ன? அவர்களிடம் சிக்கிக்கொண்ட n;பண்களை ஜீவா காப்பாற்றினாரா? இறுதியில் என்ன நடந்தது? காதலித்து ஏமாந்த பெண்களின் நிலை என்ன? என்பதே கதைக்களம்.

புதுமுகம் இஷான் அறிமுகமாகும் முதல் படத்திலேயே சமூக அக்கறையுடன் கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். அவருக்கே உரித்தான பாணியில் நடனம், காதல், ஆக்ஷன் என்று இயல்பாக கலந்து கொடுத்து அனைத்து காட்சிகளிலும் முழு பங்களிப்பை கொடுத்து தேர்ந்த நடிகர் போல் நடித்துள்ளார். இவரின் உயரம் இவருக்கு ப்ளஸ்சாக இருப்பதால் சண்டைக் காட்சிகளில் சிறப்பாக செய்துள்ளார். ஏமாறும் பெண்களை ஒன்று திரட்டி அவர்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றி சாதிக்க வைக்கும் இளைஞராக இந்தப் படத்தில் கதை நாயகனாக வலம் வருகிறார்.

காதலி மித்ராவாக வரும் ப்ரணாலி புதுமுகம் என்பது தெரியாதவாறு படத்தின் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளார்.

மிரட்டல் வில்லனாக முறைக்கும் பார்வையுடன் டேனியல் பாலாஜி, சத்யன், சூப்பர் குட் சுப்ரமணி, ரமா, ரவி, வெங்கட்ராமன், கல்கி ராஜா, நிஷ்மா செங்கப்பா, ரமேஷ் சக்கரவர்த்தி படத்தின் பக்கமேளங்கள்.

ஜேம்ஸ் வசந்தன், வேத்ஷங்கர், கிரி நந்த் ஆகியோரின் கூட்டு முயற்சியில் வந்திருக்கும் இசையும், பின்னணி இசையும் அசத்தல் ரகம்.

கே.எஸ்.விஷ்;ணு!ஸ்ரீ; ஒளிப்பதிவு படத்தின் விறுவிறுப்பான காட்சிகளுக்கு உத்தரவாதம்.

எடிட்டர்-எம்.தியாகராஜன்,  கலை இயக்குனர் பாலுமகேந்திரா சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் படத்திற்கு பலம்.

இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் அரியவன் படத்தின் திரைக்கதை எழுத மாரிசெல்வனின் கதையுடன் ஜகஜீவன் வசனத்துடன் இயக்கியிருக்கிறார். பாலியல் வன்கொடுமை, ரவுடிகள் மிரட்டலை மையப்படுத்தி வந்திருக்கும் கதைக்களத்தை வேறு கோணத்தில் யோசித்து ஏமாந்த பெண்களுக்கு ஆதரவாக, அவர்களின் நம்பிக்கையை சின்னபின்னமாக்கும் காதலர்களை கண்டு பயப்படாமல் தைரியமாக நின்று எதிர்த்து குரல் கொடுத்து ஒற்றுமையாக இருந்தால் எவ்வளவு வலிமையானவர்களையும் எதிர்த்து அவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்கலாம் என்பதை மையப்படுத்தி இயக்கியிருக்கிறார் மித்ரன் ஆர். ஜவஹர். முதல் பாதி காதலித்து ஏமாந்த பெண்களின் நிலையையும், இரண்டாம் பாதி அவர்களின் பயத்தை தூக்கியெறிந்து அழிக்கும் சக்தியாக இறுதியில் மாறுவதாக முடித்திருப்பது சிறப்பம்சம். காதலியுங்கள் ஆனால் நல்லவர்களாக என்று அறிந்து புரிந்து காதலியுங்கள் என்பதைச் சொல்லும் படம்.

மொத்தத்தில் எம்ஜிபி மாஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் அரியவன் அநீதிக்கு எதிராக பெண்கள் ஒற்றுமையாக இருந்தால் முடியாதது எதுவுமில்லை என்பதை அறிய செய்தவன்.