‘ஃ’ (அக்கு) திரைப்பட விமர்சனம் : ‘ஃ’ (அக்கு) பார்வையாளர்களை கவரவில்லை | ரேட்டிங்: 2/5

0
196

‘ஃ’ (அக்கு) திரைப்பட விமர்சனம் : ‘ஃ’ (அக்கு) பார்வையாளர்களை கவரவில்லை | ரேட்டிங்: 2/5

அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ‘ஃ’ திரைப்படத்தை தயாரித்து வெ.ஸ்டாலின் இயக்கியிருக்கிறார்.
இதில் பிரஜன், காயத்ரி ரெமா, ; காயத்ரி ரெமா, பருத்திவீரன் வெங்கடேஷ்,  ‘கலக்கப்போவது யாரு’ சரத், ‘கலக்கப்போவது யாரு’ வினோத், ராமநாதன், தயாளன், வடக்குவாசல் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு தேவசூர்யா, இசை சதீஷ், படத்தொகுப்பு அரவிந்த் ஆறுமுகம், இயக்கம் ஸ்டாலின், பிஆர்ஒ-நித்தீஷ் ஸ்ரீராம்.
சினிமா துறையில் எடிட்டராக இருக்கும் கதையின் நாயகன் ப்ரஜின். அங்கு மாடலிங் காக வரும் கதாநாயகி ஸ்வேதா மீது காதல்கொள்கிறார். பிறகு இருவரும் பேசிக்கொள்கின்றனர், ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த காதலை இருவரும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் நண்பர்களாகவே இருக்கின்றனர். கதாநாயகிக்கு  படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று அதற்காக முயற்சியில் இருக்கிறார். நாயகனின் நண்பர்கள், பெரிய இயக்குனரான ருத்ரன் என்பவரிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிகின்றார்கள். ஆனால் ருத்ரன் ஒரு தீவிரமான மனநோயாளி. தன் நண்பர்களிடம்இயக்குனர் ருத்ரன் எடுக்கும் அடுத்த படத்தில் தன் காதலி ஸ்வேதாவுக்கு ஒரு வாய்ப்பு வாங்கி தருமாறு கேட்கிறார். அவர்களும் மறுநாள் அலுவலகத்திற்கு ஆடிசன் வர சொல்கின்றனர். . அவரை அந்த அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கிறான். பிறகு அங்கிருந்து கிளப்பிவிடுகிறான். அப்படிப்பட்ட ருத்ரனிடம் நாயகி வாய்ப்பு கேட்டு வந்த ஸ்வேதா கொலையாகிறார். இயக்குனர் ருத்ரன் அலுவலகத்தில் ஸ்வேதாவின் பிணம் கிடக்கிறது. அங்கு ருத்ரனோ, அவரது உதவி இயக்குனர்களோ இல்லை. போலீசார் ஒருபக்கம் அந்த நபர்களைத் தேடுகின்றனர். இன்னொரு பக்கம் அதிர்ச்சிக்குள்ளான நாயகன் ப்ரஜின் அவனுடைய நண்பர்களை தேடி அலைகிறார். நண்பர்களை தேடி செல்ல போகும் இடத்தில் எல்லாம் அங்கு ஒவ்வொருவராக கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர். அந்தக் கொலையைச் செய்தது ப்ரஜின் என்று சந்தேகிக்கின்றனர் போலீசார். இந்த கொலைகளுக்கும் எனக்கும் எந்த தொட்ர்பும் இல்லை என நாயகன் ப்ரஜின் கூறினாலும் அவனை போலீஸ் துரத்துகிறார்கள். கடைசியில் இதற்கெல்லாம் யார் காரணம் என நாயகன் தேடி கண்டுபிடித்தாரா? இந்த கொலைகளை செய்தது யார்? என்பதே படத்தின் மீதி கதை.
நாயகனாக நடித்திருக்கும் ப்ரஜின் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார். திறமை இருந்தும் சரியான கதை களம் அமையாவிட்டால் சினிமாவில் வெற்றி பெறுவது கடினம். ஆகையால் தான் நடிக்கும் படங்கள் வெற்றிபெற போராடி கொண்டிருக்கும் ப்ரஜின், கதை தேர்வில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
படத்தின் சைக்கோத்தனமான வில்லனாக இயக்குநர் ருத்ரன் கச்சிதமாக பெருந்தியுள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, பருத்திவீரன் வெங்கடேஷ்,  ‘கலக்கப்போவது யாரு’ சரத், ‘கலக்கப்போவது யாரு’ வினோத், ராமநாதன், தயாளன், உள்ளிட்டோர்  தனது பணியை சரியாக  செய்திருக்கிறார்கள்.
தேவசூர்யாவின் ஒளிப்பதிவு, அரவிந்த் ஆறுமுகத்தின் படத்தொகுப்பு, சதீஷின் இசை ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் குழப்பமான கதைக்கு முடிந்த அளவுக்கு காட்சியோடு பயணித்திருக்கிறார்கள்.
இது திரில்லர் கதையா அல்லது பேய் கதையா என்ற குழப்பத்தில் திரைக்கதை அமைத்து ஸ்டாலின் இயக்கியுள்ளார்.
மொத்தத்தில் அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள ‘ஃ’ (அக்கு) பார்வையாளர்களை கவரவில்லை.