கருப்பங்காட்டு வலசு விமர்சனம்
க்ரூவ் 21 எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் கருப்பங்காட்டு வலசு படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் செல்வேந்திரன்.
எபிநேசர் தேவராஜ், நிலீமா இசை, ஜார்ஜ் விஜய், ஆரியா, மாரி செல்லதுரை, கௌரிசங்கர்,ஜிதேஷ் டோணி, சந்தியன் ஆகியோர் பக்குவமான நடிப்பில் வெளிவந்துள்ள படம் கருப்பங்காட்டு வலசு.
தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – ஷரவன் சரவணன், இசை – ஆதித்யா – சூர்யா, படத்தொகுப்பு – தமிழ் குமரன், பாடல்கள் – எஸ்..ஞானகரவேல்,லைன் புரொட்யூசர் – நவீன் பிரபு, நிர்வாக தயாரிப்பு- எபிநேசர் தேவராஜ், மக்கள் தொடர்பு-சதீஷ்(எய்ம்)
கருப்பங்காட்டு வலசு தலைவரின் மகள் நிலீமா இசை கிராமத்தில் நவீன வசதிகளை ஏற்படுத்தி ஸ்மார்ட் கிராமமாக உருவாக்கி முன் மாதிரியாக திகழ வைக்கிறார். இதனை கொண்டாடும் விதமாக கோலகலமாக ஊர் திருவிழா நடைபெறுகிறது. அன்று இரவே நான்கு பேரின் மரணம் நிகழ்கிறது. இந்த மரணத்தை விசாரிக்க நியமிக்கப்படும் போலீஸ் அதிகாரியால் மரணத்தின் காரணத்தை கண்டுபிடிக்க முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.பச்சைக்கிளி வாத்தியாராக எபிநேசர் தேவராஜ் கிராமத்து கலைஞராகவும், காந்திமதியாக நிலீமா இசை, காவல் ஆய்வாளராக ஜார்ஜ் விஜய், மல்லியாக ஆரியா, நொண்டி கருப்பனாக மாரி செல்லதுரை, இரட்டைமலையாக கௌரிசங்கர், புகைவண்டி வேலனாக ஜிதேஸ் டோணி, பாலகுருவாக சந்தியன் ஆகியோhர் கிராமத்து மக்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.
ஷரவன் சரவணனின் ஒளிப்பதிவும், ஆதித்யாவின் இசையும் கிராமத்து மக்களின் வாழ்வியலை இசையோடு கலந்து கொடுத்துள்ளனர்.
எழுத்து, இயக்கம்-செல்வேந்திரன். நான்கு மரணங்கள் கிராமத்தில் நடக்க அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கும் போது தான் நான்குவித சூழலில் மரணங்கள் வெவ்வேறு கோணத்தில் பயணிக்க அதை சுவாரஸ்யமாகவும், யதார்த்தமாகவும் காட்டி இறுதி வரை மர்மத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் செல்வேந்திரன். முதல் பாதியை விட இரண்டாம் பாதி விறுவிறுப்பாக கொடுத்துள்ளார்.
அனைவரையும் கவரும் கருப்பங்காட்டு வலசு.