“தௌலத்” நவம்பர் 27 முதல் திரையரங்குகளில்!

0
35

“தௌலத்” நவம்பர் 27 முதல் திரையரங்குகளில்!

ரைட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக எம்பி முகம்மது அலி தயாரிப்பில், சக்தி சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள முழுநீள ஆக்‌ஷன் திரைப்படமான ‘தௌலத்’ வரும் நவம்பர் 27 ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக, தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர்…
“தமிழ் திரையுலகில் இதுவரை 20’க்கும் மேற்பட்ட திரைப்படங்களை விநியோகித்து வெற்றி கண்ட ‘ரைட் ஆர்ட்ஸ் நிறுவனம்’ தற்போது “தௌலத்” திரைப்படத்தை தயாரித்துள்ளது. இண்டெர்நேஷனல் தரத்தில் முழுநீள ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தபடத்திற்கு
U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களால் கணிக்க முடியாத அளவிற்கு பல்வேறு திருப்பங்களுடன் மிரட்டலாக அமைந்துள்ளது. அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியாத அளவில் கதை நகரும்படி இப்படத்தின் படத்தொகுப்பு வேகத்தை கூட்டியுள்ளது. திரைக்கதையின் விறுவிறுபிற்கேற்ப அமைந்துள்ள பின்னணி இசை படத்திற்கு கூடுதல் சிறப்பு.
எந்த ஒரு பிரம்மாண்டத்திற்கும் துவக்கம் சிறியதே. அப்படி சிறியதாக ஆரம்பிக்கப்பட்டு, சிறப்பாக வளர்ந்து ஒரு தரமான ஆக்‌ஷன் திரைப்படமாக வந்துள்ளது. யோகிபாபுவின் நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது. விநியோகஸ்தராக
பெயர் பெற்ற எனக்கு, இந்த ‘தௌலத்’ திரைப்படத்தின் மூலம் நல்ல தயாரிப்பாளர் என்ற அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன். சென்சார் போர்டு கமிட்டிக்கும், இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி இத்திரைப்படம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. முழு நீள கமர்ஷியல் படமான இப்படத்தை ரசிகர்கள் உற்சாகத்துடன் திரையில் கொண்டாடுவார்கள்.