3 நாட்களில் ரூ. 100 கோடி… தொடரும் வலிமையின் வசூல் வேட்டை

0
83

3 நாட்களில் ரூ. 100 கோடி… தொடரும் வலிமையின் வசூல் வேட்டை

அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வலிமை திரைப்படம் 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டியுள்ளது.

பண்டிகைகள் இல்லாத நேரத்தில் வெளியாகி ஒரு படம் இந்த அளவுக்கு வசூலித்திருப்பது என்பது இதுவே முதன்முறை என, சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடப்பாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக வலிமை அமைந்துள்ளது. சுமார் 3 மணி நேரம் ஓடும் படமாக வலிமை முதலில் வெளிவந்தது. இதில், படத்தின் வேகத்திற்கு தடை போடும் காட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து படக்குழுவினர் 15 நிமிட காட்சியை கத்தரித்துள்ளனர். தற்போது ட்ரிம் செய்யப்பட்ட வலிமைதான் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆக்சன் காட்சிகள் அற்புதமாக இருந்தாலும், சென்டிமென்ட் காட்சிகள் வலியப் புகுத்தப்பட்டதாக இருந்ததென விமர்சனங்கள் எழுந்தன. ஒட்டுமொத்தமாக படம் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் இருப்பதாக சினிமா ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்து வலிமை. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால், வலிமை படத்துக்கு தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. மக்களின் வருகை வசூலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வலிமையின் பாக்ஸ் ஆஃபீஸ் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, வலிமை திரைப்படம் கடந்த 3 நாட்களில் மட்டும் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தின் வசூலை ஆஸ்திரேலியாவில் ஓவர்டேக் செய்திருக்கும் வலிமை, விஸ்வாசம் வசூலையும் விரைவில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரமும் பெரிய பங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், வலிமையின் வசூல் வேட்டை இந்த வாரமும், அடுத்த வாரமும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.