வரிசி விமர்சனம்: வரிசி தவறு செய்பவர்களை தண்டனை கொடுக்க தூண்டில் போட்டு இழுக்கும் கருவி

0
74

வரிசி விமர்சனம்: வரிசி தவறு செய்பவர்களை தண்டனை கொடுக்க தூண்டில் போட்டு இழுக்கும் கருவி

கார்த்திக் மற்றும் சப்னா காதலர்கள். இவர்கள் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து பல எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்துடன் கண்டுபிடிப்புகள் செய்து தொழில் செய்து வருகின்றனர். சொந்த வீடு கட்டினால் தான் திருமணம் என்பது சப்னாவில் கனவு. அவர் வேலை செய்யும் ஐடி கம்பெனியிலிருந்து கால் டாக்சியில் தினமும் வீட்டிற்கு வருகிறார். அதே சமயம் சில இடங்களில் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. ஒருநாள் சப்னா தினமும் பயணிக்கும் காரில் கால்டாக்சி டிரைவரால் கடத்தப்படுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் சப்னாவை தேடி அலைகின்றனர். இறுதியில் சப்னாவை கண்டுபிடித்தார்களா? கால் டாக்சி டிரைவரை வலைவிரித்து பிடித்து என்ன செய்தார்கள்? என்பதே மீதிக்கதை.

அறிமுக இயக்குநர் கார்த்திக் தாஸ் எழுதி இயக்கி ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். அறிமுக கதாநாயகியாக சப்னா தாஸ், கிருஷ்ணா, துஷாரா, ஆவிஸ் மனோஜ், ஜெயஸ்ரீ, அனுபமாகுமார், கணேஷ், பாலாஜி ராஜசேகர், மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இயல்பாக நடித்துள்ளார்கள்.

மிதுன் மோகனின் ஒளிப்பதிவு நந்தாவின் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம்.

எடிட்டர் கேடி இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்திருக்கலாம்.

காதல், நட்பு, நகைச்சுவை,சென்டிமெண்ட் கலந்து சுமூக அக்கறையோடு தொழில்நுட்பம் பயன்படுத்தி சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் அவலங்களை அழுத்தமாக பதிவு செய்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக கொடுத்திருந்தாலும் சில இடங்களில் கதை மெதுவாக நகர்வதால் கொஞ்சம் திரைக்கதையில் அழுத்தம் கொடுத்து இயக்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் இயக்குனர் கார்த்திக் தாஸ் மாறுபட்ட சிந்தனைக்கு பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ரெட் பிலிக்ஸ் பிலிம் பாக்டரி சார்பில் சந்திரசேகர் மற்றும் முயற்சி படைப்பகம் தயாரிப்பில் வரிசி தவறு செய்பவர்களை தண்டனை கொடுக்க தூண்டில் போட்டு இழுக்கும் கருவி.