மணி ரத்தினத்திற்கு, சுஹாசினியின் காதலுக்கு முன்பே வேறு காதல் இருந்திருக்கிறது; பல ஆண்டு கனவை நனவாக்கிய லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனுக்கு மிகப்பெரிய நன்றி – நடிகர் பார்த்திபன்
போன வாரம் பார்த்த படம் பழகிவிட்டது போன மாதம் கேட்ட கதை பழையதாகி விட்டது. ஆனால், பல ஆண்டுகளாக நடந்த கதை கல்கியின் எழுத்தால் சரித்திரமாக மாறிவிட்ட இந்த படைப்பு, அவருடைய கனவை இன்று கலக்கி இருக்கிறார் மணி ரத்னம் அவர்கள். நான் பேசும்போது நீங்கள் கை தட்டி பாராட்டுவது போல் இன்று கல்கி இருந்திருந்தால் மணி ரத்தினம் அவர்களை கைதட்டி பாராட்டியிருந்திருப்பார்.
மணி ரத்னத்திற்கு சுஹாசினிக்கு முன்பு ஒரு காதல் இருந்திருக்கிறது. அது பொன்னியின் செல்வன் என்று நினைக்கிறேன். அப்படி காதல் இல்லை என்றால் இந்த படத்தை நிச்சயம் அவர் செய்திருக்க முடியாது. பொன்னியின் செல்வனில் கடைசி புள்ளி எழுத்து நான்தான்.
நடிக்கவே வராதவர்களுக்கு கூட மணி சார் இருந்தால் நடிக்க வந்து விடும். இப்படத்தின் வாய்ப்பு கிடைத்ததும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நாம் தூய தமிழில் பேசினோம். ஆகையால், நமக்கு தமிழ் நன்றாக பேச வரும் என்று இறுமாப்புடன் சென்றேன். ஆனால், அங்கு சென்றதும் ஒரு மாப்பு கூட வேலை செய்யவில்லை. முதல் நாள் படப்பிடிப்பிலேயே மணிரத்தினம் சார் அவ்வளவு தூய தமிழில் எல்லாம் பேச வேண்டாம் என்று கூறி மட்டம் தட்டினார். மட்டம் தட்டுவது என்றால் தமிழில் இரண்டு அர்த்தம் இருக்கிறது. கேவலப்படுத்துவது என்று ஒரு அர்த்தம், இன்னொன்று கட்டடம் கட்டுவதற்காக மட்ட பலகையை வைத்து சுவரை சமன்படுத்த பயன்படுத்துவதுதான் மட்டம் தட்டுவது என்பது. அதைத்தான் மணிரத்னம் சார் செய்தார்.
பல வருடமாக செயல்படுத்த முடியாத கனவு படத்தை பின்னணியாக இருந்து நனவாக்கிய லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் அவர்களுக்கு பெரிய நன்றி. லைகாவின் பயணத்தில் இந்தப் படம் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக அழகி ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் நந்தினியாக நடித்திருக்கிறார் என்று கூறுவதைவிட, இந்த படத்திற்காக தன்னை அர்ப்பணித்திருக்கிறார் என்று கூறுவதே சரியாக இருக்கும் என்றார்.
மணி ரத்னம் வெற்றி பட்டியலில் இது முக்கிய படமாக இருக்கும் – நடிகர் கமலஹாசன்
எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்றும் தெரியவில்லை. என்னுடைய மணி ரத்னம் கதை பற்றி சொல்ல நிறைய உள்ளது. இதை எம்.ஜி.ஆர் வாங்கி வைத்திருந்தார். அவர் சீக்கிரம் எடுத்துவிடு என்று சொன்னார் அப்போது புரியவில்லை.
ஆனால், அந்த எண்ணம் அனைவருக்கும் வந்து விட்டது. நான் முயற்சி செய்தேன். ஆனால், என்னால் எடுக்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது.
மணி ரத்னம் வெற்றி பட்டியலில் முக்கிய படமாக இது இருக்கும். மேடை அலங்காரத்திற்காக நான் இதை சொல்லவில்லை.
#ஷோலே மாதிரி ஒரு படம் எடுக்க முடியுமா என்று நினைத்து இருக்கோம். அது மாதிரி தான் இந்த படம்.
இது ஒரு சிறிய குடும்பம். இதில் பொறாமை பட நேரமில்லை. அதை இளம் வயதில் புரிந்து கொண்டவர் நானும் ரஜினியும்.
வந்திய தேவன் கதாப்பாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் என சிவாஜி சொன்னார். அதை கேட்ட எனக்கு ஷாக்கா இருந்தது. என்னா, அந்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்றிருந்தேன். சரி சிவாஜி சாரே ரஜின்னு சொல்லிட்டாரேன்னு அதை விட்டு விட்டு.. அப்ப எனக்கு என்ன கேரக்டர்ன்னு கேட்டேன்? நீ அருண்மொழி வர்மன் கேரக்டர் செய் என்றார். அது அன்று நடக்காமல் போனது. இன்று. ரஜினி செய்ய நினைத்த கேரக்டரில் கார்த்தியும், எனக்கான கேரக்டரில் ஜெயம்ரவியும் நடிக்க கிடைத்துள்ளது.
வெற்றி வரும், தோல்வி வரும் ஆனால், அதை புரிந்து கொள்ள வேண்டும்.
AR.ரஹ்மானின் ஒவ்வொரு பாட்டும் என்னுடைய இதய துடிப்பை அதிகரித்தது. நீங்கள் எனக்காக போட்ட பாடலை நான் திரும்ப திரும்ப கேட்டு வந்தேன் என்றார்.