பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே விமர்சனம்: அனைவருக்கும் கவரும்

0
138

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே விமர்சனம்: அனைவருக்கும் கவரும்

ரெயின்போ புரொடக்சன்ஸ் சார்பில் வரதராஜ் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே. இந்தப் படத்தில் சின்னத்திரையில் பிரபலமான ராஜ்கமல், ஸ்வேதா பண்டிட் ,மது, ஜெயச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-விவேக் சக்கரவர்த்தி, ஒளிப்பதிவு – சதீஷ் குமார், பிஆர்ஒ-சக்தி சரவணன்.

பிளே பாயாக சுற்றி திரியும் அரவிந்த் (ராஜ்கமல்) சமூக ஊடகங்களில் நட்பாகும் பெண்களை காதலிப்பது போல் நடித்து அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் எடுத்துமிரட்டி அவர்கள் மூலமே பணம் கொள்ளையடிப்பான். அவனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். போலீசார் துப்புத் துலக்க ஆரம்பிக்கிறார்கள்.
அதே சமயம், நந்தினியையும் அப்படித்தான் காதலிக்க ஆரம்பிக்கிறார் அரவிந்த்.அரவிந்தை நந்தினியும் முழுதாக நம்புகிறாள்.இருவரும் கொடைக்கானலுக்கு ஜாலி டூர் செல்கிறார்கள். மலை உச்சியில் கூடாரம் அடித்துத் தங்குகிறார்கள்.

இந்நிலையில் அப்போது வரும் ஒரு தொலைபேசி அழைப்பால் அரவிந்த் கெட்டவன் என்று நந்தினிக்கு தெரியவருகிறது. இறுதியில் அரவிந்திட்மிருந்து தப்பித்தாரா? போலீஸ் பிடியில் அரவிந்த் சிக்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சின்னத்திரை நடிகரான ராஜ்கமல் தான் படத்தின் கதாநாயகன். தன் வலையில் சிக்கியவர்களிடம் மிரட்டும் போதும் நல்ல, கெட்ட என இருவேறுபட்ட நடிப்பின் மூலம் ஈர்க்கிறார்.

நந்தினியாக ஸ்வேதா பண்டிட் நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஒரு காதலியாகக் கொஞ்சும் போதும் துரோகம் அறிந்து குமுறும்போதும் போதும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக மது, ஜெயச்சந்திரன், ஆப்ரிக்க நாட்டவர் மற்றும் பலர் கதை ஓட்டத்திற்கு ப்ளஸ்.

சதீஷ்குமாரின் ஒளிப்பதிவையும் விவேக் சக்ரவர்த்தியின் இசையையும் படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படி எல்லாம் கிரிமினலாக பயன்படுத்தி இளைய சமூகத்தினரை குறிப்பாகப் பெண்களை குறிவைத்தும், வை- பை மூலம் செல்போன்களின் தகவல்கள் திருடப்படுவதைக் காட்டி, தொழில்நுட்ப வசதிகள் எந்தளவுக்கு ஆபத்தானது என்று எச்சரித்து திரைக்கதை அமைத்து ஒரு சாதாரண செல்போன் மூலம் பெண்கள் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்கிற விழிப்புணர்வு வைத்து இயக்கியிருக்கிறார் வரதராஜ்.

மொத்தத்தில் பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே அனைவருக்கும் கவரும் பாடம்.