பூமிகா விமர்சனம்

0
13

பூமிகா விமர்சனம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியில் பாழடைந்த பல ஏக்கர்கள் நிறைந்த இடத்தில் சிறந்த தொழில்நுட்பம் கலந்த கட்டடத்தை கட்டி புதிய பகுதியை உருவாக்கும் முயற்சியில் அமைச்சரின் உதவியோடு களமிறங்குகிறார் விது. விது தன்னுடன் மனைவி ஐஸ்வர்யா ராஜேஷ், மகன் சித்து, பசுமை கட்;டட நிபுணர் தோழி சூர்யா கணபதி, தங்கை அதிதி ஆகியோருடன் அந்த இடத்திற்கு பயணிக்கிறார். அந்த இடத்தில் விதுவுக்கு உதவியாக பாவேல் நவகீதன் பணி செய்கிறார். அந்த இடத்தில் ஆரவாரமற்ற பங்களாவில் தங்கும் இவர்களுக்கு ஆமானுஷ்ய சக்தியால் தொல்லை ஏற்படுகிறது. இதனால் அந்த இடத்தை விட்டு உடனடியாக செல்ல நினைக்கும் அவர்களால் செல்ல முடியாத சூழலில் மாட்டிக் கொண்டு அனைவரும் தவிக்கிறார்கள். இறுதியில் இவர்கள் ஆமானுஷ்ய சக்தியிடமிருந்து தப்பித்து சென்றார்களா? ஏன் எதனால் இவர்களை துரத்தி பயமுறுத்தி கொள்ள நினைக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

இதில் ஆரவாரமில்லாத, மிகையில்லா அழுத்தமான தெளிவான நடிப்பால் ஐஸ்வர்யா ராஜேஷ் நினைவில் நிற்கிறார்.இவருடன் புதுமுகங்களாக விது, சூர்யா கணபதி, மாதுரி, அவந்திகா வந்தனப்பூ ஆகியோருடன் பாவேல் நவகீதன் படத்திற்கு ப்ளஸ்பாயிண்ட்.

ராபர்டோ ஜஸாரா ஒளிப்பதிவு, பிருத்வி சந்திரசேகரின் இசை படத்தின் திகில் நிறைந்த சம்பவங்களுக்கு உயிர் கொடுத்து, அனிமேஷன் காட்சிகள், பழைய பிளாஷ்பேக் காட்சிகளில் முத்திரை பதித்துள்ளனர்.

பள்ளி நூலகர் ஆட்டிசம் பாதித்த மகளை அன்போடு அரவணைத்து இயற்கை உலகத்தை உணர்வுபூர்வமாக புர்pய வைத்து பள்ளியில் படிக்க வைக்க போராடும் சாதாரண மனிதரின் வாழ்க்கையில் ஏற்படும் அதிர்ச்சி நிறைந்த சம்பவங்கள், சக மனிதர்களின் பேராசையால்; ஏற்படும் விபரீதங்களால் அந்த பகுதியை பாழடையும் நிலைக்கு தள்ளப்பட, இதற்கு தீர்வு காண புதுப்பிக்க வரும் நபர்களிடமிருந்து எப்படி இயற்கை தன்னை பாதுகாத்துக் கொண்டு பழிவாங்குகிறது என்பதை திகில் நிறைந்த இயற்கையோடு சமூக அக்கறை கலந்து அறிவியல் ரீதியாக த்ரில்லர் கதையை கொடுத்து புது முயற்சி, புது சிந்தனையோடு களமிறங்கி கை தட்டல் பெறுகிறார் இயக்குனர் ரத்திந்திரன் ஆர் பிரசாத்.

மொத்தத்தில் ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டியோஸ் சார்பில் கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம், ஜெயராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள பூமிகா கள்ள கபடமில்லாத இயற்கையை நேசிக்கும் அன்பு மகள்.