நடிகர் சூர்யாவை விமர்சிப்பது எந்த்வகையிலும் நியாயம் இல்லை!: அன்புமணிக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை

0
37

நடிகர் சூர்யாவை விமர்சிப்பது எந்த்வகையிலும் நியாயம் இல்லை!: அன்புமணிக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை

அரசியல், ஜாதி, மத சார்பின்றி கல்விப்பணியில் கலங்கரை விளக்காக செயலாற்றி வரும் சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸுக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

மரியாதைக்குரிய டாக்டர்‌ அன்புமணி ராமதாஸ்‌ அவர்களுக்கு வணக்கம்‌.

நடிகர்‌ சூர்யாவின்‌ அவர்களின்‌ நடிப்பில்‌ வெளிவந்த ஜெய்பீம்‌ திரைப்படத்தில்‌
தொழில்நுட்ப கலைஞர்களால்‌ காண்பிக்கப்பட்ட தங்கள்‌ கட்சியின்‌ முத்திரையை
நீங்கள்‌ அடையாளப்படுத்தி அதை நீக்க வேண்டும்‌ என வேண்டுகோள்‌ வைத்தீர்கள்‌.
அந்த காட்சி தொழில்நுட்ப கலைஞர்களின்‌ தவறான புரிதலால்‌ இடம்பெற்றுள்ளதை
அறிந்து தங்களின்‌ உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த காட்சியை உடனடியாக
‘திரைப்படத்திலிருந்து நடிகர்‌ சூர்யா அவர்கள்‌ நீக்கிவிட்டார்‌. அந்த முத்திரை
‘இடபெற்றதில்‌ படத்தின்‌ தயாரிப்பாளரும்‌, கதாநாயனுமான நடிகர்‌ சூர்யாவிற்கு எந்த
வகையிலும்‌ தொடர்பு இல்லை. இருப்பினும்‌ தங்கள்‌ கட்சியை சார்ந்தவர்கள்‌ நடிகர்‌
சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருவது எந்த வகையிலும்‌ நியாயம்‌ இல்லை. இந்த
செயல்‌ மிகவும்‌ வருத்தமளிக்கிறது.

அரசியல்‌, ஜாதி, மத, இன சார்பு இன்றி சமூக அக்கறையோடு ஈகை குணத்துடன்‌
விளிம்புநிலை மாணவர்கள்‌ மீது அக்கறை கொண்டு அவர்களது கல்விப்‌ பணியில்‌
பெரும்‌ பங்கெடுத்து செயலாற்றி வரும்‌ நடிகர்‌ சூர்யா அவர்களை விமர்சிப்பதை
தவிர்க்குமாறு தமிழ்நாடு திரைப்படத்‌ தயாரிப்பாளர்கள்‌ சங்கம்‌ அன்புடன்‌
கேட்டுக்கொள்கிறது.