‘தளபதி 68’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது!

0
201

‘தளபதி 68’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் ‘தளபதி 68’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த படத்துக்கு ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (The Greatest Of All Time) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் இடம்பெற்றுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இடதுபுறம் இருக்கும் விஜய் விண்வெளிக்கு செல்லும் முன்பும், வலதுபுறம் இருக்கும் விஜய் விண்வெளியில் இருந்து வந்த பின்னும் இருப்பதுபோன்றே புகைப்படம் உள்ளது. மட்டுமல்லாது பின்னால் பாராசூட் கிடக்கிறது.