ஜோதி விமர்சனம் : ஜோதி பிரசவிக்கும் தாயின் பிரகாசமான வாழ்க்கைக்கு எச்சரித்து வழி காட்டும் தீபஒளி |மதிப்பீடு: 3.5/5

0
429

ஜோதி விமர்சனம் : ஜோதி பிரசவிக்கும் தாயின் பிரகாசமான வாழ்க்கைக்கு எச்சரித்து வழி காட்டும் தீபஒளி |மதிப்பீடு: 3.5/5

எஸ்.பி.ராஜா சேதுபதி தயாரிப்பில் ஜோதி படத்தில் வெற்றி, ஷீலா ராஜ்குமார்,கிரிஷா குரூப்,இளங்கோ குமரவேல்,மைம் கோபி,நான் சரவணன்,சாய் பிரியங்கா ருத்,ராஜா சேதுபதி,பூஜிதா தேவராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஏவி.கிருஷ்ண பரமாத்மா.ஒளிப்பதிவு: செசி ஜெயா, இசை: ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், படத்தொகுப்பு: சத்ய மூர்த்தி, பாடல்கள்:கார்த்திக் நேத்தா, பாடகர்கள்: கே. ஜே ஜேசுதாஸ், பல்ராம், கார்த்திக், ஆர்த்தி கோவிந்த், நடனம்: சுவிகுமார், சண்டை: சக்தி சரவணன்,மக்கள் தொடர்பு: வின்சன் சி. எம்.

சப் இன்ஸ்பெக்டர் வெற்றியும், கிரிஷா குரூப் குழந்தையில்லாத தம்பதியர். இவர்களின் எதிர்வீட்டில் வசிக்கும் டாக்டர் சரவணன் -ஷீலா ராஜ்குமார் ஆகியோருடன் நட்பாக பழகுகின்றனர். நிறை மாத கர்ப்பிணியான ஷீலா, தன் கணவன் ஊருக்கு சென்றிருக்கும் சமயத்தில் பிரசவ வேதனையில் துடிக்கிறார். இவரின் அலறல் சத்தம் கேட்டு வரும் கிரிஷா அங்கே கண்ட காட்சியில் அதிர்ந்து போகிறார். ஷீலா வயிற்றை கிழித்து குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டதை அறிந்து தன் கணவர் வெற்றிக்கு தகவல் கொடுத்து விட்டு மருத்துவமனையில் ஷீலாவை சோக்;கிறார். அதன் பின் போலீஸ் விசாரணை தொடங்குகிறது. எந்த ஒரு தடயமும், சிசிடிவி காட்சிகளும் கடத்தியவனை அடையாளம் காட்ட முடியாமல் இருக்க, இறுதியில் இன்ஸ்பெக்டர் வெற்றி குற்றவாளி யார் என்று கண்டுபிடித்தாரா? கடத்தியதன் மர்ம பின்னணி என்ன? ஏன் இதைச் செய்தார்கள்? என்பதே ரியலாக நடந்த ரீல் படத்தின் மீதிக்கதை.

இன்ஸ்பெக்டராக வெற்றி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து திறம்பட நடித்துள்ளார். படத்தின் கதாநாயகியாக ஷீலா ராஜ்குமார் யதார்த்தமான நடிப்பால் மனதில் இடம் பிடிக்கிறார். கிரிஷா குரூப்,இளங்கோ குமரவேல்,மைம் கோபி,நான் சரவணன்,சாய் பிரியங்கா ருத், ராஜா சேதுபதி, பூஜிதா தேவராஜ் இவர்கள் அனைவருமே கதையின் நாயகர்கள் படத்தின் ஒட்டத்திற்கு ப்ளஸ் பாயிண்ட்.

செசி ஜெயாவின் ஒளிப்பதிவு இந்தத் படத்தின் முக்கிய நோக்கத்தை எந்த ஒரு இடர்பாடில்லாமல் நேர்த்தியாக கையாண்டுள்ளதற்கு காட்சிகளே உத்திரவாதம். இரவில் நடக்கும் சம்பவங்களை யதார்த்தமாக தன் காட்சிக்கோணங்களில் கொடுத்து அசரவைத்துள்ளார்.

மற்றும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்; மிகக் சிறந்த இசையமைப்பாளர் என்பதை உணர்த்தும் வகையில் சிறப்பாக வேலையைச் செய்துள்ளார்.

எடிட்டர்-சத்ய மூர்த்தி;, சண்டை- சக்தி சரவணன் ஆகியோருடன் மற்ற தொழில்நுட்பத் துறையினர் கச்சிதமாக செய்துள்ளனர்.

பிறந்த உடனேயே தாயின் கைக்கு போவதற்கு முன்பே இறந்தாக சொல்லி கடத்தப்படும் பச்சிளம் குழந்தைகளின் பரிதாப நிலையை உணர்த்தும் படம். இதனால் தாய் படும் வேதனை, குடும்பத்தார் குழந்தையை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வீணாக, இந்த மனஉளைச்சலில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கும் தாய்மார்களின் உள்ளக் குமறலை சொல்லும் படம். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையாக இந்தப் படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் ஏவி.ஏவி.கிருஷ்ண பரமாத்மாவின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி இந்தப்படம். இவ்வாறு காணாமல் போன குழந்தைகள் மீண்டும் கண்டுபிடிப்பது கஷ்டம், எங்கே எடுத்துச் சென்றார்கள்? யாரிடம் கொடுத்தார்கள்? என்பது இன்று வரை புலப்படாத ஒரு விஷயம் என்பதை சிறப்பாக சொல்லி அசத்தலாக எடுத்துள்ளார் இயக்குனர் ஏவி.கிருஷ்ண பரமாத்மா.

மொத்தத்தில் எஸ்.பி.ராஜா சேதுபதி தயாரிப்பில் ஜோதி பிரசவிக்கும் தாயின் பிரகாசமான வாழ்க்கைக்கு எச்சரித்து வழி காட்டும் தீபஒளி.