கலைஞர் 100: ‘முதலமைச்சராக இல்லாமல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக அனைவருக்கும் நன்றி!’

0
192

கலைஞர் 100: ‘முதலமைச்சராக இல்லாமல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக அனைவருக்கும் நன்றி!’

இந்த நிகழ்ச்சியில் நான் உரையாற்ற வரவில்லை நன்றி கூற வந்துள்ளேன். முதலமைச்சராக இல்லாமல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாக அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “கலைஞர் 100’ விழாவில் பேசினார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு திரைத்துறை சார்பில் கலைஞர் 100 விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக (டிச. 06) நடைபெற்றது. இதில் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 22000 சீட்டுகள் அமைக்கப்பட்டு 1000த்திற்க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். மேலும் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவக்குமார், தனுஷ், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, ஷிவ் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல் நடிகைகள் கௌதமி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், ப.ரஞ்சித், மோகன் ராஜா, லோகேஷ் கனகராஜ், நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் விஜய் மற்றும் அஜித் கலந்து கொள்ளவில்லை.

இந்த விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“நடிகர் சங்கம் சார்பில் இந்த இனிய நிகழ்ச்சியை பெருமைபடுத்த கூடிய வகையில் கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் நான் உரையாற்ற வரவில்லை நன்றி கூற வந்துள்ளேன். அப்பா, அம்மா வைத்த பெயரை கூட கூப்பிட்டாமல் கலைஞர் என்று தொண்டர்களால் அழைக்கப்பட்டவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவர் மறைந்த போது தமிழ்நாடே கலங்கி நின்றது. எல்லா தரப்பு மக்களும் அவர் மறைந்த போது அஞ்சலி செலுத்தினர்.

இன்று இந்த நிகழ்ச்சியில் நடிகர் சங்கத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் இந்த கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி உள்ளீர்கள். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் நன்றி கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளேன். இன்றைய அரசு திரைத்துறையினருக்கு பல்வேறு திட்டங்கள் தீட்டிக்கொண்டு இருக்கிறது. அமைச்சர் உதயநிதி சினிமா துறையில் கால் பதித்தவர். பூந்தமல்லியில் 150 கோடியில் திரைப்பட நகரம் அமைய உள்ளது. முதலமைச்சராக இல்லாமல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்னாக அனைவருக்கும் நன்றி”.

இவ்வாறு பேசினார்.