என்னை நம்பிய தனுஷ் சாருக்கு நன்றி – இயக்குநர் அருண் மாதேஸ்வரன்

0
116

என்னை நம்பிய தனுஷ் சாருக்கு நன்றி – இயக்குநர் அருண் மாதேஸ்வரன்

T.G.தியாகராஜன் சாருக்கு என் முதல் நன்றி. என்னை நம்பி இவ்வளவு பெரிய படம் செய்ததற்கு நன்றி. முதலில் நான் தேவதாஸ் என்ற கதை எழுதினேன், ஜீவிக்கு தெரியும், அந்தக்கதைக்கே தனுஷ் சாரைத்தான் அணுக முயற்சித்தேன் முடியவில்லை. ராக்கிக்கும் அவர் தான் மனதிலிருந்தார், ஆனால் நடக்கவில்லை. இந்த வாய்ப்பு வந்த போது, உடனே இந்தக்கதையை அனுப்பி விட்டேன். என்னை நம்பி வந்துவிட்டார். ராக்கி வரும் முன்னரே படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். அடுத்து இன்னும் ஒரு பெரிய படம் செய்யப்போகிறோம். நான் எந்தக்கதை எழுதினாலும், அவர் தான் முதன் முதலில் மனதில் வருகிறார். என்னை நம்பிய தனுஷ் சாருக்கு நன்றி. ஜீவி எனக்கு மிகவும் நெருக்கம், அவரோடு படம் செய்தது மகிழ்ச்சி. சிவராஜ்குமார் சாரைச் சந்திக்கப் பெங்களூர் போனேன், அவரைப் பார்த்தது காட்ஃபாதர் பட அனுபவம் போல இருந்தது. அங்கு அவர் அப்படிதான் இருந்தார். தனுஷ் எனக்குப் பிடிக்கும், அவருக்காக நடிக்கிறேன் என்று நடிக்க வந்தார். அவர் ஒரு ஸ்டார், ஆனால் எங்களை எல்லாம் ஈஸியாக வைத்துக் கொண்டார். பிரியங்காவிற்கு முதல் நாள் ஷீட்டிங்கிலேயே, துப்பாக்கி தந்துவிட்டோம், பயந்து விட்டார். கொஞ்ச நாளில் பழகிவிட்டார், அட்டகாசமாக நடித்துள்ளார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும், நன்றி.

ALSO READ:

உண்மையில் அருண் மாதேஸ்வரன் தான் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டெவில் – தனுஷ்
https://www.chennaicitynews.net/cinema/உண்மையில்-அருண்-மாதேஸ்வர/

தமிழ் சினிமாவும், இந்திய சினிமாவும், பெருமைப்படும் படைப்பாக ‘கேப்டன் மில்லர்’ இருக்கும் – ஜீவி பிரகாஷ்
https://www.chennaicitynews.net/cinema/தமிழ்-சினிமாவும்-இந்திய/