இறுதிப்பக்கம் விமர்சனம்: இறுதிப்பக்கம் சஸ்பென்ஸ் கலந்த வித்தியாசமான பக்கம்

0
39

இறுதிப்பக்கம் விமர்சனம்: இறுதிப்பக்கம் சஸ்பென்ஸ் கலந்த வித்தியாசமான பக்கம்

எழுத்தாளரான அம்ருதா ஸ்ரீநிவாசன் கொலை செய்யப்பட்டு அவருடைய வீட்டில் இறந்து கிடக்கிறார். தகவலறிந்து வரும் போலீஸ் விசாரணையை மேற்கொள்கிறது. போலீஸ் அதிகாரி  ராஜேஷ் பாலச்சந்திரன் மற்றும் கிரிஜா ஹரி இணைந்து கொலைகாரனை தேடிச் செல்கின்றனர். ஒவ்வொரு கோணத்திலும் முன்னேற்றம் ஏற்பட அம்ருதாவின் முன்னாள் காதலன் விக்னேஷ், அவருடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீராஜ் பற்றிய தகவலும், அம்ருதாவின் நடவடிக்கைகளும் போலீசுக்கு தெரிய வருகிறது. அதன் பின் குற்றவாளியை கைது செய்து விசாரித்தாலும், கொலை செய்ய சொன்னவர் யார் என்பது மட்டும் புலப்படாமல் இருக்கிறது. இறுதியில் யார் இந்த கொலையை செய்ய தூண்டியவர்கள்? கொலைக்கான காரணம் என்ன? அம்ருதா கடைசியாக எழுதிய இறுதிப்பக்கம் (லாஸ்ட் பேஜ்) புத்தகம் யாரிடம் இருக்கிறது? என்பதே படத்தின் விறுவிறுப்பான க்ளைமேக்ஸ்.

இதில் ராஜேஷ் பாலச்சந்திரன், அம்ருதா ஸ்ரீநிவாசன், விக்னேஷ் சண்முகம், கிரிஜா ஹரி, ஸ்ரீராஜ், சுபதி ராஜ் ஆகியோர் படத்திற்கு பக்கபலமாக இருந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு-பிரவின்பாலு, இசை-ஜோன்ஸ் ரூபர்ட் இருவரின் பங்களிப்பு சிறப்பு.

ராம் பாண்டியனின் படத்தொகுப்பு படத்திற்கேற்ற காட்சிகளை குளறுபடி செய்யாமல் தேவையானவற்றை கொடுத்து அசத்தியுள்ளார்.

சுதந்திரத்தன்மைகொண்ட எழுத்தாளர், தன்னிச்சையாக வாழ்ந்து தனது எண்ணத்தை தைரியமாக தெளிவாக சொல்லி அதனால் தன் காதலுக்கே இடையூறு வந்தாலும் அதை தாங்கிக்கொண்டு கடைசி வரை போராடி துணிச்சலாக எடுக்கும் முடிவே படத்தின் திரைக்கதை. இதில்; அவரின் பிளாஷ்பேக் கதையையும் இணைத்து க்ளைமேக்ஸில் யார் என்ற மர்மத்தை புரிய வைத்து இறுதிப்பக்கத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் இயக்குனர் மனோ.வெ.கண்ணதாசன். பாராட்டுக்கள்.

மொத்தத்தில் ஆன் இன்சோமேனியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் சிலம்பரசன், கிருபாகர், செல்வி வெங்கடாசலம் இணைந்து தயாரித்திருக்கும் இறுதிப்பக்கம் சஸ்பென்ஸ் கலந்த வித்தியாசமான பக்கம்.