ஆன்டி இந்தியன் விமர்சனம்

0
68

ஆன்டி இந்தியன் விமர்சனம்

இந்து தாய்க்கும், முஸ்லிம் தந்தைக்கும் பிறந்தவர் பாட்ஷா. தந்தை இறந்து விட தாய் சரோஜா கிருத்துவராக மதம் மாறி லூர்து மேரி என்று பெயர் மாற்றம் செய்து கொள்கிறார். பாட்ஷாவை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கொலை செய்கிறார்கள். பாட்ஷா உடலை பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்ய முடியாமலும், இந்து முறைப்படி அடக்கம் செய்ய மறுக்கப்படுவதாலும், உடல் வீட்டிற்கே எடுத்து வரப் படுகிறது. தாய் கிருத்துவராக இருப்பதால் அவர்களின் வழக்கப்படி நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று உறவினர்களை வற்புறுத்துகின்றனர். இதனால் பெரும் சர்ச்சை கிளம்பி பரபரப்புடன் செல்ல, அந்த தொகுதில் இடைத்தேர்தல் வேறு நடக்கவுள்ளதால் அரசியல் கட்சிகளும் தங்களது ஆதரவை பெற முற்படுகின்றனர். இந்த இடைத்தேர்தல் நேரத்தில் கலவரம் நடக்காமல் இருக்க அமைதி பேச்சு வார்த்தை நடத்த திட்டமிடுகின்றனர். அந்த நேரத்தில் நடக்கும் கலவரம் என்ன? மாறனின் உடன் எந்த மத வழக்கப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது? அரசியல் தந்திரத்தால் தேர்தல் நடந்ததா? ரத்து செய்யப்பட்டதா? என்பதே மீதிக்கதை.

பு@ சட்டை மாறன் ஆரம்பம் முதல் இறுதி வரை பிணமாகவே இருக்கிறார் அதனால் எந்த ஒரு நடிப்பதற்கும், பேசுவதற்கான வாய்ப்பும் இல்லை. அவரின் வாழ்க்கையை வசனங்களாலே சொல்லிவிடுவதால் ப்ளாஷ்பேக் காட்சிகளும் இல்லை. இவரது தாய் மாமனாக வரும் ஜெயராஜ் ஏழுமலையாக சென்னை பாஷை பேசி நடிப்பில் அதிர வைக்கிறார்.
முதல்வராக வரும் ராதாரவி, பாட்ஷாவின் அம்மாவாக வரும் விஜயா, உதவி கமிஷனராக வரும் ஆடுகளம் நரேன், வழக்கு எண் முத்துராமன், பசி சத்யா, சுரேஷ் சக்ரவர்த்தி, குக் வித் கோமாளி’ பாலா,கர்ண ராஜா, சினேபா, இயக்குனர் வேலு பிரபாகரன், மகேஷ், கில்லிமாறன், அனில்குமார், ஷான், சார்லஸ் வினோத்  என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும் இவர்களின் தேர்ந்த நடிப்பால் அனைவருமே கொடுத்த வேலையைச் கச்சிதமாக செய்துள்ளனர்.

கதிரவனின் ஒளிப்பதிவு சிறப்பான காட்சிகளை அழகாக படம் பிடித்து அசத்தியுள்ளார்.

சுதர்சனனின் எடிட்டிங் இன்னும் சில காட்சிகளை கத்திரி போட்டிருந்தால் நச்சென்று இருந்திருக்கும்.

முதல் படத்திலேயே கதை, வசனம், திரைக்கதை எழுதி இசையமைத்திருக்கும் பு@ சட்டை மாறனின் அயராத உழைப்பு அபாரம்.பாட்ஷாவின் மரணம், அடக்கம் செய்வதில் சிக்கல்;, தேர்தல் நேரத்தில் அரசியல் செய்ய முயலும் கட்சிகள், ஊடகங்களின் பங்கு, இதனிடையே மதவாத அரசியல் சக்திகள், காவல்துறை சேர்ந்தால் இல்லாதவற்றை இருப்பதாக காட்டும் சூழ்ச்சி நாடகங்கள், அதற்கு பலியாகும் அப்பாவி பொதுமக்கள் என்று எல்லாவற்றையும் தைரியமாகவும், ஆணித்தரமாகவும், துணிந்து சொல்லியிருக்கும் விதத்தில் அசத்தி விடுகிறார். சில காட்சிகளே வந்தாலும் கில்லி மாறனின் இடையிடையே நறுக் கேளிவிகளும், விஜய் டிவி பாலாவின் காமெடி கலந்த நய்யாண்டி பேச்சும் படத்திற்கு ப்ளஸ். எந்த ஒரு மதப்பிரச்சினை ஏற்பட்டாலும் அதை அப்படியே விட்டு விட்டால் தானாக சரியாகிவிடும், அதை பெரிதாக்கும் அரசியல் கட்சிகளும், அதிகார துஷ்பிரயோகம் தான் கலவரத்தை ஏற்படுத்துகிறது என்பதை சுட்டிக் காட்டி சொல்லியிருப்பதில் ஜெயித்திருக்கிறார். கானா பாடல்கள் ரசிக்க வைத்தாலும் தொடர்ச்சியாக வராமல் இடையிடையே வருவது தான் நெருடல். அவரது முகத்திலேயே ஆரம்பித்து முகத்திலேயே முடிகிறது கதைக்களம்.

மொத்தத்தில் மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ஆன்டி இந்தியன் வித்தியாசமான கதைக்களத்தில் கவர்ந்து அனைவரையும் படம் பார்க்க வைக்கும் ஆர்டினரி இந்தியன்.