ஜனம் தமிழ் டி.வி.யின் டிஜிட்டல் ஒளிபரப்பு தொடக்கம்!

0
712

ஜனம் தமிழ் டி.வி.யின் டிஜிட்டல் ஒளிபரப்பு தொடக்கம்!

  • தமிழக பா.ஜ.க. தலைவர் திரு. கு. அண்ணாமலை உள்ளிட்ட பிரபல அரசியல் தலைவர்கள் துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்பு !
  • தேசம், தெய்வம், தமிழ் சார்ந்த அனைத்து தகவல்களையும் உடனுக்குடன், உண்மையுடன் வழங்கும் டிஜிட்டல் ஊடகமாக மலர்கிறது, ஜனம் தமிழ் டி.வி.!
  • புதிய லோகோ மற்றும் வெப்சைட் – யூ-டியூப் – பேஸ்புக் – இன்ஸ்டாகிராம் ஆகிய டிஜிட்டல் மீடியாக்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட்டன!

சென்னை, மலையாளத்தில் புகழ்பெற்ற முன்னணி செய்தித் தொலைக்காட்சியான ஜனம் டி.வி. (JANAM TV), தமிழில் கால் பதித்துள்ளது. இதன் தமிழ் முகமான  “ஜனம் தமிழ் டி.வி. டிஜிட்டல்”-இன் தொடக்க விழா இன்று (15 ஜூலை 2023), சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் திரு. கு.  அண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில், மருதம் மல்டிமீடியா நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ள “ஜனம் தமிழ் டி.வி.”யின் லோகோவை சிறப்பு விருந்தினர்கள் அனைவரும்  சேர்ந்து அறிமுகப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஜனம் தமிழ் வெப்சைட்டை பா.ஜ.க. தலைவர் திரு. கு. அண்ணாமலையும்,  யூ-டியூபினை இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சி சுப்பிரமணியனும், பேஸ்புக் பக்கத்தை சக்தி மசாலா நிறுவனத்தின் அதிபர்கள் திரு. துரைசாமி – திருமதி சாந்தி துரைசாமியும், இன்ஸ்டாகிராம் பக்கத்தை தமிழறிஞர் முனைவர் கு. ஞானசம்பந்தனும் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில்  பா.ஜ.க. மாநிலத் தலைவர் திரு. கு. அண்ணாமலை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திரு. வைகைச் செல்வன், இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் திரு. காடேஸ்வரா சி சுப்பிரமணியன், பா.ஜ.க. சிறுபான்மையினர் அணியின் தேசியச் செயலாளர் திரு. வேலூர் இப்ராஹிம், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் திரு. பி. ஆண்டாள் சொக்கலிங்கம், திரு. ஆர். நடராஜ் ஐ.பி.எஸ்., (ஓய்வு), தமிழறிஞர் முனைவர் கு. ஞானசம்பந்தன், சக்தி மசாலா நிறுவனத்தின் அதிபர்கள் திரு. துரைசாமி – திருமதி சாந்தி துரைசாமி, பட்டிமன்றப் பேச்சாளர் திரு. மணிகண்டன், திரு. நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்., திரைப்படப் பின்னணிப் பாடகர் திரு. வேல்முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக, நிகழ்ச்சியின் தொடக்கத்தில், பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்தின் இறை வணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றது.  தொடர்ந்து, ஜனம் தமிழ் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் திரு. மது வரவேற்புரை ஆற்றினார். அடுத்ததாக, ஜனம் மலையாளம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் திரு.  கிருஷ்ணகுமார் ஜனம் தொலைக்காட்சியின்வரலாறு குறித்துப் பேசினார். திரு. நம்பி நாராயணன் இத்தொலைக்காட்சி பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்.

இத்தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி திரு. ரமேஷ் பிரபா ஜனம் தமிழ் டிவி டிஜிட்டல் அறிமுகம் பற்றிக் கூறுகையில், “தேசம், தெய்வம், தமிழ் ஆகிய மூன்றையும் உள்ளடக்கி உடனுக்குடன், உண்மையுடன் செய்திகள் வெளியாகும் நோக்கோடு இந்த ஜனம் தமிழ் டி.வி. டிஜிட்டல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அரசியல், திரைப்படம், ஆன்மீகம், இலக்கியம், இசை, பொருளாதாரம், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து செய்திகளும் இடம்பெறும்.  இந்த டிஜிட்டல் மீடியாக்களைத் தொடர்ந்து, ஜனம் தமிழ் டி.வி. –   சாட்டிலைட் செய்திச் சேனலாக வெகு விரைவில் ஒளிபரப்பாகும்.

செய்திகள் வழங்கும் விதத்தில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதே எங்களது நோக்கம். மாநிலச் செய்திகள் மட்டுமல்லாது உள்ளூர் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை தேசியக் கண்ணோட்டத்தோடுஎங்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பும். அரசியல் விவாதம், மக்களின் குரல், ஆன்மீக உலா, பொதுமக்கள் வாக்கெடுப்பு, தமிழ் மொழி சார்ந்த தகவல்கள்  உள்ளிட்ட விதவிதமான நிகழ்ச்சிகள் இதில் இடம் பெறும்” என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில், ஜனம் தமிழ் டி.வி.யின் செய்தி ஆசிரியர் திரு. மகாலிங்கம் பொன்னுச்சாமி நன்றி உரை ஆற்றினார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திரு ஜெயக்குமார், ஜனம் தமிழ் தொலைக்காட்சியை நடத்தும் மருதம் மல்டிமீடியா நிறுவனத்தின் இயக்குனர்கள் திரு. முத்துக்குமார், திரு, அமித் கோத்தாரி, திருமதி சித்ரா, டாக்டர் விஜய், திரு. நரேந்திரன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும், 1,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும்இதில் கலந்து கொண்டனர்.

டிஜிட்டல் அலைவரிசையின் முகவரிகள் வருமாறு :

Website: janamtamil.com | Facebook.com/janamtamil | YouTube.com/@janamtamil | Instagram.com/janamtamil | Twitter.com/janamtvtamil