பெட்ரோல், டீசலை தொடர்ந்து வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்வு! கணிசமாக உயரும் மாதாந்திர பட்ஜெட் செலவுகள்!! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி…!!!

0
58

பெட்ரோல், டீசலை தொடர்ந்து வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்வு!
கணிசமாக உயரும் மாதாந்திர பட்ஜெட் செலவுகள்!!
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. நவம்பர் 2ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவது இதுவே முதல்முறை. 

சென்னை: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது.

இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. கடந்த நான்கரை மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், 137 நாட்களுக்கு பின் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 102.58 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 77 காசுகள் உயர்ந்து 92.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.95.41 ஆகவும், டீசல் விலை ரூ.86.67 ஆகவும் உள்ளது. மும்பையில், தற்போது பெட்ரோல் விலை ரூ.109.98 ஆகவும், டீசல் விலை ரூ.94.14, ஹைதராபாத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.109.10 ஆகவும், ஹைதராபாத்தில் ஒரு லிட்டர் உள்ளது. விஜயவாடாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ டீசல் ரூ. 96.83. ஆகவும் விற்பனையாகிறது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணையதளத்தில் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டில் சமையல் காஸ் விலை செவ்வாய்க்கிழமை சிலிண்டருக்கு ரூ.50 அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் எரிவாயு சிலிண்டர் விலை 965 ரூபாய் 50 காசுகளாக உள்ளது.

டெல்லியில் 14.2 கிலோ எடையுள்ள மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.949.50 ஆக உள்ளது.

தெலுங்கானாவில் சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.1000ஐ தாண்டியுள்ளது.

5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை இப்போது ரூ. 349, 10 கிலோ எடையுள்ள கலப்பு பாட்டிலின் விலை ரூ. 669. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை தற்போது ரூ. 2003.50. எரிவாயு விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

இந்தியாவில்  பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும், சமையல் எண்ணெய், காபி தூள், டீ தூள், நூடுல்ஸ் என பல்வேறு வகை உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாமானியர்களின் மாதாந்திர பட்ஜெட் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.