இலங்கையில் ஒரு பவுன் தங்கம் 1.5 லட்சம் : அப்ப நம்ம ஊர் காசுக்கு எவ்வுளவு வரும்?

0
131

இலங்கையில் ஒரு பவுன் தங்கம் 1.5 லட்சம் : அப்ப நம்ம ஊர் காசுக்கு எவ்வுளவு வரும்?

இலங்கையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இலங்கையில் கொரோனா தொற்றின் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்குப் பெரிய வருவாய் என்றால் அது சுற்றுலாத்துறைதான். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று நீடித்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது.

இதனால், அந்நிய செலாவணி இருப்பு வெகுவாகக் குறைந்ததால் ரூபாயின் மதிப்பு வேகமாகச் சரிந்துவிட்டது. இதன் காரணமாக உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செல்வதில் அந்நாட்டிற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே, மின்னல் வேகத்தில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. அதேபோல் கடந்த ஒருமாதமாக மின், எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.254க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்நியச் செலவாணி குறைந்ததால் இலங்கையில் ஒரு பவுன் தங்கம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையைப் பார்த்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. மேலும் இது இலங்கை வரலாற்றிலேயே புதிய உச்சமாகும்.

இப்படி உணவு பொருட்கள் முதல் தங்கம் வரை அனைத்து பொருட்களின் விலையும் கடுமையான உச்சத்தை எட்டி வருவதால் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதிங்கி நிற்கிறார்.

இலங்கையில், ஒருபவுன் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்து 680க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.