அதி நவீன எல்டிஇ 900 தொழில்நுட்பத்துடன் தமிழகத்தில் வலைப்பணி அனுபவத்தை மேம்படுத்தும் ஏர்டெல் 

0
64

அதி நவீன எல்டிஇ 900 தொழில்நுட்பத்துடன் தமிழகத்தில் வலைப்பணி அனுபவத்தை மேம்படுத்தும் ஏர்டெல் 

  • தமிழகம் முழுவதுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு உள்ளரங்க வலைப்பணியைக் கணிசமாக மேம்படுத்த உயர்தர 900 பேண்ட்டில் 5 எம்ஹெச்இசட் ஸ்பெக்ட்ரம் அறிமுகம் 

சென்னை:பார்தி ஏர்டெல் (ஏர்டெல்) நிறுவனம் தமிழகத்தில் உள்ளரங்க இணைப்பை அதிகரிக்கும் வகையில் தனது உயர் வேக தரவு வலைப்பணியை மேம்படுத்த உள்ளது. வீடுகள் மற்றும் வணிகக் கட்டுமானங்களுக்குள் தரவு வலைப்பணியை மேலும் அதிகரிக்கும் வகையில் நிறுவனம் உயர்தர 900 எம்ஹெச்இசட் பேண்டில் கூடுதலாக 5 எம்ஹெச்இசட் ஸ்பெக்ட்ரமை அறிமுகப்படுத்தி உள்ளது.

கொள்ளை நோயைத் தொடர்ந்து, வீட்டிலிருந்தே அலுவல் பணி, ஆன்லைன் வகுப்பு, காணொலி ஸ்ட்ரீமிங்க் ஆகியவை உயர் வேகத் தரவுச் சேவைகளை அதிக அளவில் நம்பியுள்ளன. உயர்தர எல்டிஇ 900 தொழில்நுட்ப அறிமுகம் வாடிக்கையாளர்களின் வலைப்பணி அனுபவத்தை மேம்படுத்தும் ஏர்டெல் முனைவின் ஓர் அங்கமாகும். 900 எம்ஹெச்இசட் ஸ்பெக்ட்ரமுக்கு உயரிய சமிக்ஞை பரப்பு திறனும், நகரப் பகுதி உள்ளரங்குகளில் சிறந்த இணைப்புத் திறனும் இருப்பதால், கிராமப் பகுதிகளில் வலைப்பணி கிடைப்பதை உறுதிப்படுத்தும்.  

இந்திய அரசு சமீபத்தில் நடத்திய எலம் மூலம் ஏர்டெல் நிறுவனம் 900 மற்றும் 1800 பேண்ட்களில் தமிழகத்துக்காக 20 எம்ஹெச்இசட் கூடுதல் ஸ்பெக்ட்ரமைப் பெற்றுள்ளது. இதன் காரணமாக தரவு சேவைகளின் வளரும் தேவைகளை நிறைவு செய்ய ஏர்டெல் நிறுவனத்திடம் தமிழகத்தில் 65 எம்ஹெச்இசட் திறனுடனுன் வலுவான ஸ்பெக்ட்ரம் தொகுப்பு உள்ளது.  ஏற்கனவே இந்தியாவின் முதல் 5ஜி அனுபவத்தை 4ஜி வலைப்பணியில் வழங்கியதைத் தொடர்ந்து, 5ஜி சேவை வழங்க ஏர்டெல் வலைப்பணி தயாராக உள்ளது

பார்தி ஏர்டெல் தமிழகம் & கேரளம் சிஇஓ அமீத் திரிபாதி தொடர்கையில் ஏர்டெல் தொழில்நுட்பத்தின் அபரிமித வளர்ச்சியும், கண்டுபிடிப்பும், உலகத் தரமான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க, டிஜிடலில் முன்னணி வகிக்க வேண்டுமென்னும் எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியுள்ளது.  எல்டிஇ 900 தொழில்நுட்ப அறிமுகம் ஏர்டெல் 4ஜி வலைப்பணித் திறனை வீட்டுக்குள்ளும், கட்டிடங்களுக்குள்ளும், இன்னும் மேம்படுத்தும். தமிழகத்திலுள்ள எங்கள் வாடிக்கையாளர்கள் மேம்படுத்தப்பட்ட வலைப்பணி மூலம் தடையற்ற அதி வேக தரவையும், ஹெச்டி தர அழைப்பு அனுபவத்தையும்,  அனுபவிப்பார்கள்’ என்றார்.

1103 சிற்றூர்கள் மற்றும் 44052 கிராமங்களை உள்ளடக்கித் தமிழகத்தின் 97% மக்கள் தொகைக்கு  ஏர்டெல் வலைப்பணி சேவை வழங்குகிறது.