அடையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்படுவதை கண்டறிய தானியங்கி நவீன கருவி!!

0
36

அடையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்படுவதை கண்டறிய தானியங்கி நவீன கருவி!!

சென்னை விமான நிலையத்தில் 2வது ஒடுபாதை அருகே அடையாறு செல்கிறது. கடந்த 2015ம் ஆண்டு அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் விமான நிலைய ஒடுபாதையில் தண்ணீர் தேங்கியதால் மூடப்பட்டது. இதையடுத்து அடையாற்றில் வெள்ள பெருக்கு அதிகமான உடனடியாக கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள நவீன கருவி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

விமான நிலையம் 2வது ஒடுபாதை அருகே கடல் மட்டத்தில் இருந்து 10.5 மீட்டர் உயரத்தில் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் வெள்ள பெருக்கு ஏற்படுவதை கண்டறிய நவீன கருவி அமைக்கப்பட்டு உள்ளது.

அடையாற்றில் கடல் மட்டத்தில் இருந்து 9.5 மீட்டர் உயரத்தில் வெள்ளம் வந்தால் இது பற்றி நவீன கருவி அலரம் அடிக்கும். மேலும் இது பற்றி தகவல்களை விமான நிலைய இயக்குனர் உள்பட 10 முக்கிய விமான நிலைய அதிகாரிகளுக்கு செல்லும்.

இந்த தகவல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு விமான போக்குவரத்து தடையில்லாமல் வழங்கிட முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ள பெருக்கு குறித்த நவீன கருவி பயனுள்ளதாக இருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.