
பேரறிவாளன் தனக்கென இல்லற வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, சென்னை விமான நிலையத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில் தாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேரில் சந்தித்தனர். தொடர்ந்து பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் சார்பில் தனது விடுதலைக்காக அழுத்தமான வாதங்களை முன்வைத்தமைக்கும் பேரறிவாளன் நன்றி தெரிவித்தார்.