
பெரும்பான்மையுடன் ஆறாவது முறையாக ஆட்சி அமைக்கிறது திமுக :
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி இராமநாராயணன் அவர்கள் புதிய அரசு அமைக்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உதயசூரியனின் பார்வையில் தமிழகம் இனி வீறுநடைபோடும்.
தமிழக அரசியல் வரலாறு 5௦ வருடங்களுக்கு மேலாக அரசியலும் சினிமாவும் பின்னி பிணைந்தே வருகிறது.
டாக்டர் கலைஞர் ஐந்து முறை தமிழக முதல்அமைச்சராக பதவி வகித்தபோது தமிழகத்தை எல்லா துறைகளின் வளர்ச்சியிலும் அதிக அக்கறை கொண்டு செயல்படுத்தி வெற்றிகண்டார். அதிலும் தமிழ் திரைஉலகம் மீது தனி கவனம் கொண்டு அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.
டாக்டர் கலைஞர் அவர்கள் திரை உலகிற்கு செய்த சாதனைகள் அதிகம். குறிப்பாக தமிழ் வார்த்தைகளில் படத்தலைப்பு வைத்தால் அந்த படங்களுக்கு கேளிக்கை வரி முற்றிலுமாக ரத்து செய்தார்.
அரசாங்க இடங்களில் நடைபெறும் படங்களின் படப்பிடிப்புக்கான கட்டணங்களை வெகுவாசு குறைத்து தயாரிப்பாளர்களின் மனங்களை குளிர்வித்தார்.
சென்னை அருகே பையனூரில் தயாரிப்பாளர்கள். நடிகர் நடிகையர், இயக்குனர்கள் உட்பட தொழில்நுட்ப கலைஞர்கள், சின்னத்திரையினர் அனைவருக்கும் வீடு கட்ட 100 ஏக்கர் இடம் தந்து அகும் மகிழச் செய்தார்.
குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்ட தரமான படங்களுக்கு ஒவ்வொருவருடமும் தாமதிக்காமல் மானியம் வழங்கி மசிழ்வூட்டினார். இப்படி அவர் திரை உலகிற்கு வழங்கிய சலுகைகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம்.
ஆனால் இன்று திரை உலகத்தினரின் நிலையில் குறிப்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த நிலை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தாயுள்ளத்தோடு பரிசீலித்து தமிழ் திரை உலகை வாழவைப்பார் என்ற நம்பிக்கை திரை உலகினரின்
மத்தியில் உள்ளது.
டாக்டர் கலைஞர் ஆட்சியின்போது உள்ள மசிழ்வான நிலை மீண்டும் தொடர்ந்திடவும், வேலைவாய்ப்பு பெருகிடவும், அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றம் குறைந்திடவும், மக்களின் வாழ்வாதாரம்
காத்திடவும், கொரோனாவின் பிடியிலிருந்து அனைவரும் வெளிவந்திடவும். திரை உலகினரின் வாழ்க்கை மேம்படவும் இறைவன் கொடுத்த அருட்கொடைதான் தளபதி மு.ச.ஸ்டாலின் அவர்கள்.
துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பணியாற்றுகையில் உள்ளாட்சியில் தந்த நல்லாட்சியை மக்கள் இன்னும் மறக்காமல் இருப்பதையே இந்த வெற்றி உறுதிபடுத்தியிருக்கிறது.
சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகர மேயர், இன்று மக்களின் ஆதரவோடு தமிழக முதல்வராகிறார். “மகன் தந்தைக்காற்றும் உதவி அவையத்தில் முந்தி இருப்பது” என்ற அய்யன் வள்ளுவனின் குறளுக்கு ஏற்ப
‘தந்தைவழியில் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களின் ஆதரவோடு அசுர வளர்ச்சி பெற்று ஆட்சிபீடம் ஏறுவது எல்லோருக்கும் அளவில்லாத ஆனந்தம் என்றால் அது மிகையாகாது என்றே சொல்லலாம்.
மக்களின் வாழ்வு இனி ஏற்றம் பெறும் என்பதில் இனி அய்யமில்லை. அதேசமயம் இனி திரை உலகினருக்கும் பொற்காலம் என்றே சொல்லலாம்.
திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமையும் புதிய அரசிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், ஒட்டுமொத்த தமிழ்
‘திரைஉலகம் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 24 மணி நேரமும் மக்களை பற்றியே சிந்தித்து மக்களுடனே வலம் வரும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவிப்பதில்
மகிழ்ச்சி”.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.