Site icon Chennai City News

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கிடையாது – வழிகாட்டுதலை பின்பற்றி நடத்துமாறு நீதிமன்றம் அனுமதி

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கிடையாது – வழிகாட்டுதலை பின்பற்றி நடத்துமாறு நீதிமன்றம் அனுமதி

ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை கேட்டு தொடரப்பட்ட வழக்குகளை, விசாரித்த நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. 14 வழிகாட்டுதல்களை வகுத்து கொடுத்துள்ள நீதிமன்றம் அதன்படி ஆன்லைன் வகுப்புகளை நடத்துமாறு அனுமதி கொடுத்துள்ளது.

ஆன்லைன் வகுப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உருவாக்கிய நெறிமுகளைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் வகுப்பு நேரத்தை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நீதிப்பதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், பெற்றோர், ஆசிரியர்கள் இடையே கலந்துரையாடல் இருக்க வேண்டும் என்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க…மகளின் ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் ஆர்டர் செய்தவருக்கு பார்சலாக வந்த சீட்டுக்கட்டு.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

ஆன்லைன் வகுப்பின்போது ஆபாச இணையதளம் தோன்றுவது குறித்து புகார் அளித்தால் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட நீதிபதிகள், ஆன்லைன் வகுப்பு வழிகாட்டுதல்களை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Exit mobile version