Chennai City News

மெளலானா அபுல்கலாம் ஆசாத பிறந்த நாளின்று

மெளலானா அபுல்கலாம் ஆசாத பிறந்த நாளின்று

இந்திய வரலாற்றில் மறைக்க முடியாத, மறுக்க முடியாத பங்காளரான மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது என்பவர் 11 நவம்பர் 1888 அன்னிக்கு பிறந்தார். இவர் இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும், இஸ்லாமிய அறிஞரும் ஆவார்.

சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையைஎதிர்த்து இந்து- முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். 22 பிப்ரவரி 1958 ல் மறைந்தார். 1992ஆம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.

ஆனால் இவர்க்கு மற்றொரு பெயரும் உண்டு.அந்த பெயர் தான் வரலாற்றில் நிலைத்தும் நின்றது. அதுதான் மௌலானா அபுல்கலாம் ஆசாத். ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.

இன்று இந்தியாவில் அனைத்து சமூகத்துக்கும் கல்வி கிடைக்க கல்வித்துறையில் சரியான அடித்தளமிட்டார். நாட்டு மக்களின் மீது அன்பு கொண்டு, அவர்களின் கல்வி அறிவை உயர்த்திட கல்வித்துறையில் இவராற்றிய பணியை நினைவுகூறும் வகையில் இவரது பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. புதுதில்லியில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் மௌலானா ஆசாத் என்ற இவரது பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.

Exit mobile version