25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் கார்த்தி ரசிகர்கள் ; தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு – இயக்குநர் ராஜுமுருகன் தொடங்கி வைத்த தினசரி உணவு வழங்கும் திட்டம்
கார்த்தி நடிப்பில் 25 ஆவது படமாக தயாராகி இருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படத்தை கொண்டாடும் வகையில் அவருடைய ரசிகர்கள் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் பேர் வீதம், 25 ஆயிரம் மக்களுக்கு அன்னதானத்தை வழங்குகிறார்கள். கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த தினசரி அன்னதானத் திட்டத்தை ‘ஜப்பான்’ படத்தின் தயாரிப்பாளரான எஸ் ஆர் பிரபுவும், அப்படத்தின் இயக்குநரான ராஜுமுருகனும் இணைந்து தொடங்கி வைத்தனர். இதன்போது கார்த்தி மக்கள் நல மன்றத்தின் அகில இந்திய செயலாளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், மாவட்ட தலைவர்களும் உடனிருந்தனர்.