Chennai City News

20 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

20 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி பின்வருமாறு :-

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022 ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், கீழ்க்காணும் 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

இத்தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு, மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version