Site icon Chennai City News

விரும்பும் நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

விரும்பும் நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை : கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆன்லைன், அஞ்சலகம், இ-தரிசன கவுண்ட்டர்கள் மூலம் ரூ.300 சிறப்பு தரிசனம், சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளுக்கு முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனமும் ரத்து செய்யப்பட்டது.

எனவே தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் ரத்து செய்தால், அதற்கான பணத்தை திருப்பி வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிவரை டிக்கெட்டை ரத்து செய்து விட்டு பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இணையதளத்தின் மூலம் டிக்கெட்டுகளை ரத்து செய்யும்படி கேட்கும் பக்தர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் பணம் திருப்பி செலுத்தப்படும். ரத்து செய்ய விரும்பாத பக்தர்கள், அந்த டிக்கெட்டை வைத்து எப்போது வேண்டுமானாலும் தாங்கள் விரும்பும் நேரத்தில் தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவில் டைரி மற்றும் காலண்டர்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் தபால் மூலம் அவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Exit mobile version