
வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க: மனைவியுடன் மாநகராட்சி அரசு பள்ளியில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகர் சூரி!

நடிகர் சூரியும் அவரது மனைவியும் மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இதுகுறித்து நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில்,
இன்னைக்கு நானும் என் மனைவியும் , பக்கத்துல இருக்குற மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டோம். இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க” என்று தனது மனைவியுடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார் சூரி.
கொரோனா தொற்றை வெல்லும் மிகப்பெரிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி உள்ளது. ஆனால் தடுப்பூசி குறித்து சமூகவலைதளங்களில் பரவும் தகவலால் ஆரம்பத்தில் தடுப்புசி செலுத்திக்கொள்ள மக்கள் எவரும் பெரிதாக முன்வரவில்லை. ஆகையால் தடுப்பூசி போட்டுக்கொள்வதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சூரியும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இன்னைக்கு நானும் என் மனைவியும் , பக்கத்துல இருக்குற மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டோம். இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க.#GetVaccinated pic.twitter.com/ltIny34ERB
— Actor Soori (@sooriofficial) May 20, 2021