Chennai City News

மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம் : கூடுதலாக 2 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த தமிழக அரசு!

மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம் : கூடுதலாக 2 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த தமிழக அரசு!

தமிழகத்தில் பரவும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன்படி தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் போடுவதில் அரசு தீவிரம் காட்டுகிறது.

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசிகளை போட்டுவருகிறது. அதோடு தனியாா் மருத்துவமனைகளும் தடுப்பூசிகளை போட்டு வருகின்றன. இதனால், தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

ஆனால் மத்திய அரசு, தமிழகத்திற்கு தேவையான அளவு தடுப்பூசிகளை அனுப்பாமல் குறைவான தடுப்பூசிகளையே அனுப்பிவருகிறது. இதனால் தமிழக அரசு தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து நேரடியாகவும் தடுப்பூசிகளை வரவழைக்க ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று புனேவிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. 640 கிலோ எடையில் 20 பாா்சல்களாக அந்த தடுப்பூசி மருந்துகள் வந்தன.

மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம் : கூடுதலாக 2 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த தமிழக அரசு!
சென்னை விமானநிலைய அதிகாரிகள் அந்த தடுப்பூசிகளை, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அவா்கள் அந்த தடுப்பூசி மருந்துகளடங்கிய பாா்சல்களை குளிா் சாதன வேனில் ஏற்றி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்து செல்கின்றனா். அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Exit mobile version