Site icon Chennai City News

‘பத்திரிகையாளர்கள் கோரிக்கை நிறைவேற்றித்தரப்படும்’ : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

‘பத்திரிகையாளர்கள் கோரிக்கை நிறைவேற்றித்தரப்படும்’ : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

சென்னை பத்ரிகையாளர் மன்றத்திற்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுகிழமை (டிச.15) நடைபெற்றது. இந்நிலையில் இந்ததேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது, பத்திரிகையாளர்கள் கோரிக்கை நிறைவேற்றித்தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இது குறித்து சமூகவலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.

அதில், ”சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின்” புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள். அவர்கள் வாழ்த்து பெற வந்தபோது, அரசு பல்வேறு பத்திரிகையாளர் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செய்து வந்தாலும், இன்னும் சில கோரிக்கைகள் இருப்பதாகத் தெரிவித்தனர். அரசு அவற்றையும் படிப்படியாக நிறைவேற்றித் தரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘Journalism’-த்திற்கும் ‘Sensationalism’-த்திற்கும் உள்ள வேறுபாட்டினையும், அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் இளைய தலைமுறை ஊடகவியலாளர்களுக்குப் பயிற்றுவித்து, அறமுடன் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை சென்னை பத்திரிகையாளர்கள் உணர்த்திட வேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Exit mobile version