Site icon Chennai City News

தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவைத் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் 9ஆம் நாள் 9.30மணிக்கு தொடங்கவுள்ளது. அலுவல் ஆய்வு கூட்டத்தில் எத்தனை நாட்கள் கூட்டம் நடைபெறும் என்பதை கூடி முடி செய்த பிறகு தெரிவிக்கப்படும்” என்றார்.

அதன் பிறகு, சட்டப்பேரவை நிகழ்வு நேரலை மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்கு பின்பு தான் நேரலை செய்யும் முறை வந்துள்ளது. முழுமையாக நேரலை செய்வது தொடர்பாக படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வெளிநாடுசுற்றுப்பயணத்தின் போது AI தொடர்பாக பேசும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு AI தொழில் நுட்பத்தில் முதன்மை மாநிலமாக உள்ளது. மாணவர்களுக்கு இது பயனளிக்கக்கூடியதாய் அமைந்து வருவது போல், சட்டபரேவையிலும் காதிகமில்லாத முறை உள்ளது” என்றார்.

செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உடன், சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் இருந்தார்.

Exit mobile version