Chennai City News

தமிழக வெற்றிக்கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – விஜய் அறிவிப்பு!

தமிழக வெற்றிக்கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: விஜய் அறிவிப்பு!

தமிழக வெற்றிக்கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் கட்சி பதிவுக்காக பிப்.2ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தாகவும், தற்போது, தமிழக வெற்றிக் கழகத்தை பதிவுசெய்யப்பட்ட கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திசைகளை வெல்லப்போவதற்கான முன்னறிவிப்பாக முதற்கதவு திறக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், தவெக முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், தடைகளை தகர்த்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி அரசியல் கட்சியாக வலம் வருவோம் என தெரிவித்துள்ள அவர்,வெற்றி கொடியேந்தி மக்களை சந்திப்போம், வாகை சூடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version