Chennai City News

தமிழக சட்டசபை தேர்தல் 2021 மக்கள் தீர்ப்பு: சென்னை மண்டலத்தில் உள்ள 15 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை

தமிழக சட்டசபை தேர்தல் 2021 மக்கள் தீர்ப்பு: சென்னை மண்டலத்தில் உள்ள 15 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை

சென்னை, தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி 141 இடங்களில் திமுக கூட்டணியினர் முன்னிலையில் உள்ளனர். அதேபோல், 91 இடங்களில் அதிமுக கூட்டணியினரும் முன்னிலை பெற்றுள்ளனர். சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையானது சென்னை ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி மற்றும் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை மண்டலத்தில் உள்ள 15 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இதன்படி மொத்தம் உள்ள 16 தொகுதிகளில், 15 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியே முன்னிலை வகிக்கிறது. துறைமுகம் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் முன்னிலை வகித்து வருகிறார்.

திமுக கூட்டணி: 15

ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க. நகர், எழும்பூர், ராயபுரம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி

பா.ஜ.க. கூட்டணி: 1

துறைமுகம் தொகுதி

Exit mobile version