சென்னை மாநகராட்சி| கால்பந்து திடல்கள் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு.. இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்!
சென்னை மாநகராட்சி சார்பில் 9 கால்பந்து திடல்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. கால்பந்து திடல்கள் தனியார் மயமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சைதாப்பேட்டையில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. அதில் மிக முக்கியமான தீர்மானமாக “சென்னையில் அமைந்துள்ள 9 கால்பந்து திடல்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும்” தீர்மானம் இருந்தது.
இது அங்குக் கால்பந்து பயிற்சி பெற்று வரும் விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அங்கு விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு வரும் கால்பந்து வீரர்கள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
9 கால்பந்து திடல்கள் பின்வருவன,
1. முல்லை நகர், வியாசர்பாடி செயற்கை கால்பந்து மைதானம்
2 நேவல் மருத்துவமனை சாலையில் உள்ள செயற்கை கால்பந்து மைதானம்
3. தி.ரு.வி.க. நகர் விளையாட்டு மைதானம் செயற்கை கால்பந்து மைதானம்
4. ரங்கசாயி விளையாட்டு மைதானம்
5. கேபி பார்க் விளையாட்டு மைதானம் செயற்கை கால்பந்து மைதானம்
6. மேயர் சத்தியமூர்த்தி சாலை (டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு மைதானம்)
7. அம்மா மாளிகை, கோடம்பாக்கம் மெயின் ரோடு
8 காமகோட்டி நகர், 6வது தெரு செயற்கை கால்பந்து மைதானம்
9. சோழிங்கநல்லூர் ஃபஸ்டல் (OMR) செயற்கை கால்பந்து மைதானம்