Chennai City News

ஒமைக்ரான்: தினமும் 14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் – மத்திய அரசு எச்சரிக்கை

ஒமைக்ரான்: தினமும் 14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் – மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி, தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் இதுவரை 113 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவி உள்ளது.

இதற்கிடையில், உலக அளவில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அந்நாட்டில் நேற்று ஒரேநாளில் 93 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை இங்கிலாந்து தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் பரவி வரும் ஒமைக்ரான் தொற்று தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் நிதி ஆயோக் (சுகாதாரத்துறை) உறுப்பினர் டாக்டர் விகே பால் கூறுகையில், இங்கிலாந்தில் கொரோனா பரவும் அளவை பார்க்கும் போது, அதே அளவில் இந்தியாவில் பரவினால் நமது மக்கள்தொகையிடன் ஒப்பிடும்போது நாட்டில் தினமும் 14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம். இங்கிலாந்தில் கொரோனா வேகமாக பரவுவதற்கு ஒமைக்ரான் காரணமாக இருக்கலாம். ஆனால், இது அவசரமான மற்றும் எதிர்பார்க்காத சூழ்நிலையாகும். தற்போது நிலவி வரும் அனைத்து சூழ்நிலைகளையும் அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது’ என்றார்.

Exit mobile version