Chennai City News

என் வாழ்வில் இது ஒரு பொன்னான நாள்: மலாலா திடீர் திருமணம்

என் வாழ்வில் இது ஒரு பொன்னான நாள்: மலாலா திடீர் திருமணம்

பிர்மிஹாம், பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியதற்காக, மலாலா யூசுப்சை மீது தலிபான் பயங்கரவாதிகள் 2012ல் தாக்குதல் நடத்தினர். தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் உலக அளவில் பரபரப்பானது. தலையில் பலத்த காயமடைந்து இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த மலாலா, தனது குடும்பத்தினருடன் அங்கேயே வசித்து வருகிறார்.

தனது 16வது வயதில் கல்வியில் பாலின சமத்துவத்தின் அவசியம் குறித்து ஐநாவில் உரையாற்றிய மலாலா, தொடர்ந்து பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பணியாற்றி வருகிறார். இதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.

இந்நிலையில் அசர் என்பவருடன் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாமின் எளிமை முறையில் திருமணம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நேற்று (நவ.09) மலாலா யூசப்சை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் திருமண புகைபடங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் , என் வாழ்வில் இது ஒரு பொன்னான நாள், அசரும் நானும் வாழ்க்கைக்கு துணையாக இருக்க முடிவு செய்தோம். எங்கள் குடும்பத்துடன் பர்மிங்காமில் உள்ள வீட்டில் ஒரு சிறிய நிக்கா விழாவைக் கொண்டாடினோம். உங்கள் ஆசீர்வாதத்தை எங்களுக்கு அனுப்புங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் மலாலா இங்கிலாந்து பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில்,

“ மக்கள் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதை இப்போது வரைக்கும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்கள் வாழ்கைக்கு ஒரு துணைவர் வேண்டுமென்றால், பிறகு ஏன் திருமண பத்திரங்களில் கையெழுத்து இடுகிறீர்கள். அது வெறும் பாட்னர்ஷிப்பாக மட்டும் ஏன் இருக்க கூடாது” என்று குறிப்பிட்டு இருந்தார். அவரது இந்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Malala/status/1458128016157052938

Exit mobile version