Chennai City News

“இன்ஸ்பைரிங் ஆப் யூத் ஐக்கான் தமிழ்நாடு” என்ற சர்வதேச அளவிலான விருது டெல்லியில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் கவிஞருக்கு வழங்கப்பட்டது

“இன்ஸ்பைரிங் ஆப் யூத் ஐக்கான் தமிழ்நாடு” என்ற சர்வதேச அளவிலான விருது டெல்லியில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் கவிஞருக்கு வழங்கப்பட்டது.

தமிழகத்தை சேர்ந்த கவிஞர் ஜோசன் ரஞ்சித் என்ற, 23 வயது நிரம்பிய இளம் கவிஞருக்கே இந்த “INSPIRING YOUTH ICON OF TAMIL NADU ” விருது டெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சாதித்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்களைத் தேர்ந்தெடுத்து, டாப்நோட்ச் பவுண்டேஷன், அவுட் லுக் வார இதழ், இந்தியா நியூஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இதுபோன்ற விருதுகளை வழங்கி பெருமைபடுத்தி வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 70 சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் கவிஞரான ஜோசன் ரஞ்சித்திற்கு, “இன்ஸ்பையரிங் யூத் ஐக்கான் ஆப் தமிழ்நாடு” (எழுச்சிமிகு இளைஞர்களுக்கான தமிழக அடையாளம்” என்ற விருது டெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, ராம்தாஸ் அத்வாலே, பகன் சிங் குலஸ்தே, ஜான் பர்லா, மக்களவை உறுப்பினர் ராஜ்குமார் சாகர் மற்றும் நடிகர் சன்கி பாண்டே ஆகியோர் கலந்து கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனையாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.

இந்த மாபெரும் விருது வழங்கும் விழாவில், தமிழகம் சார்பில் இவர் ஒருவருக்கு மட்டுமே விருது கிடைக்கப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு, மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என‌ அனைவரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கவிஞர் ஜோசன் ரஞ்சித், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி
“அன்பு உடன்பிறப்பே” என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இதுவரை இவர் 4 தமிழ்க் கவிதை நூல்கள், 3 ஆங்கில நூல்கள் என, 7 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூல்கள் 140 நாடுகளில் அமேசான், பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இவர் சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தின் நிரந்தர உறுப்பினராக பணியாற்றி வருகிறார். தனிப்பட்ட முறையில் பல சமூக அமைப்புகளோடு இணைந்து, பல்வேறு சமூக தொண்டாற்றி வருகிறார் என்பது கூடுதல் தகவல்…

Exit mobile version