Chennai City News

ஆன்லைன் ரேபிட் செஸ் தொடர்: உலக சாம்பியன் கார்ல்செனை வீழ்த்தினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா

ஆன்லைன் ரேபிட் செஸ் தொடர்: உலக சாம்பியன் கார்ல்செனை வீழ்த்தினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா

புதுடெல்லி, ஆன்லைன் ரேபிட் செஸ் தொடர் ஆன்லைன் வழியாக நடந்து வருகிறது. அதில் 16 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடந்த ஐந்தாவது சுற்றில் சென்னையை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 40-வது நகர்த்தலின்போது வெற்றியை வசமாக்கினார்.

இந்த வெற்றி மூலம் பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் நாக்-அவுட் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறார். உலகின் இளைய கிராண்ட் மாஸ்டரான அபிமன்யு மிஸ்ராவும் 16 பேர் கொண்ட போட்டியில் பங்கேற்கிறார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் இணையம் வழியாக நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் எட்டாவது சுற்றில் உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனை தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது வீரரான பிரக்ஞானந்தா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version