வெற்றிமாறனின் ‘விடுதலை’ பாகம் 1 & பாகம் 2 – விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட்
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடித்திருக்கும் ‘விடுதலை பார்ட் 1 & பார்ட் 2’ டப்பிங் பணிகள் ஜனவரி 26 அன்று எளிய பூஜையுடன் தொடங்கியது. இதற்கான க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டது
விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைத்திருக்க வேல்ராஜ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.