Chennai City News

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு! முழு பட்டியல் இதோ!

Tamil Nadu State Film Award தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு! முழு பட்டியல் இதோ!

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்
நடிகர்,நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகள் – பரிசுகள் வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா 6.3.2024 புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் சிறப்பாக நடைபெற உள்ளது.

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்று விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்குச் காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி விழாப் பேருரையாற்றுவார்கள்.

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் சிறப்புரை ஆற்றுவார்கள்.

திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பரிசு பெறும் 2015-ஆம் ஆண்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்கள், நடிகர் நடிகையர்,தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் பின்வருமாறு:-

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களால் சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்கள் தயாரித்த குறும்படங்களின் தொழில்நுட்பக் கலைஞர்கள் என மொத்தம் 39 விருதாளர்களுக்குக் காசோலையும், விருதாளர்களின் பெயர் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

இவ்விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், உயர் அலுவலர்கள், திரையுலகத்தைச் சார்ந்த பிரமுகர்கள், நடிகர், நடிகையர் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

Exit mobile version