Chennai City News

S S ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் மற்றும் பிரபாஸின் ராதே ஷ்யாம் படங்கள் அஜித்தின் வலிமைக்கு டஃப் கொடுக்குமா?

S S ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் மற்றும் பிரபாஸின் ராதே ஷ்யாம் படங்கள் அஜித்தின் வலிமைக்கு டஃப் கொடுக்குமா?

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து, ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வரும் வலிமை 2022 பொங்கலை முன்னிட்டு ஜனவரியில் வெளியாகிறது. இதுவரை எந்த பெரிய தமிழ்ப் படமும் பொங்கல் வெளியீட்டை அறிவிக்கவில்லை. அதனால் படம் எந்த போட்டியும் இன்றி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஜனவரி 7 வெளியாகும் ஆர்ஆர்ஆர் திரைப்படமும், ஜனவரி 14 வெளியாகும் பிரபாஸின் ராதே ஷ்யாம் படமும் வலிமைக்கு டஃப் கொடுக்கலாம்.

எனினும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அஜித்தே கிங். அவரது படத்தைத் தாண்டி ராதே ஷ்யாம் வசூலிக்கப் போவதில்லை. அதேநேரம் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் கடும் போட்டியை தரும். ஆர்ஆர்ஆர் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை லைகா நிறுவனம் வாங்கியிருப்பதும் ஒரு காரணம்.

வலிமை படத்தின் யுஎஸ், யுகே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிற ஐரோப்பா நாடுகளின் விநியோக உரிமையை ஹம்சினி என்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் மட்டுமின்றி பிற மொழிப் படங்களையும் வெளிநாடுகளில் விநியோகிக்கும் பெரிய நிறுவனம் இது. டிசம்பர் 17 ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகும் அல்லு அர்ஜுனின் புஷ்பா – தி ரைஸ் படத்தின் வெளிநாடு உரிமையையும் இவர்களே வாங்கியுள்ளனர்.

அஜித் படங்களில் வெளிநாடுகளுக்கான உரிமை அதிக தொகைக்கு விற்கப்பட்ட படம் வலிமை என்கிறார்கள்.

Exit mobile version