RSSS பிக்சர்ஸ் தயாரிப்பில் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வான ‘ஒற்றைப் பனை மரம்’
சிறந்த இயக்குனர் விருது பெற்ற ”மண்” பட இயக்குனர் *புதியவன் ராசையா*வின் இயக்கத்தில் உருவாகியுள்ளது இப்படம். ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் சந்தித்துக் கொண்டிருக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக நகர்த்தும் கதையாக ‘ஒற்றைப் பனை மரம்’ உருவாகியுள்ளது.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார் அஷ்வமித்ரா. தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து இசையமைத்திருப்பது படத்திற்கு ஒரு உயிரோட்டமாக அமைந்துள்ளது. அதனாலேயே சிறந்த இசையமைப்பாளர் விருதையும் பெற்றிருக்கிறார்.