(TOURIST FAMILY​) டூரிஸ்ட் பேமிலி சினிமா விமர்சனம்: டூரிஸ்ட் பேமிலி  ஒரு மனதைத் தொடும் மற்றும் உணர்ச்சிபூர்வமான படம் | ரேட்டிங்: 3/5

0
411

(TOURIST FAMILY​) டூரிஸ்ட் பேமிலி சினிமா விமர்சனம்: டூரிஸ்ட் பேமிலி  ஒரு மனதைத் தொடும் மற்றும் உணர்ச்சிபூர்வமான படம் | ரேட்டிங்: 3/5

மில்லியன் டாலர்ஸ் ஸ்டூடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட்  சார்பில் பசிலியான் நசரேத், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கும் டூரிஸ்ட் பேமிலி படத்தை எழுதி இயக்கியிருக்கிறர் அபிஷன் ஜீவிந்.

நடிகர்கள் :
எம்.சசிகுமார்-தர்மதாஸ், சிம்ரன்-வசந்தி, மதுன் ஜெய் சங்கர்-நி​துஷன், கமலெஷ் ஜெகன்-முள்ளி, யோகிபாபு-பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் – ரிச்சர்ட், ரமேஷ் திலக்-பைரவன், பக்ஸ் (எ) பகவதி பெருமாள்- ராகவன், இளங்கோ குமரவேல் – குணசேகர், ஸ்ரீஜா ரவி- மங்கையர்க்கரசி யோகலட்சுமி-குறல்

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-ஷான் ரோல்டன், படத்தொகுப்பு-பரத் விக்ரமன், ஒளிப்பதிவு-அரவிந்த் விஸ்வநாதன், ஆடை வடிவமைப்பு-நவா ராஜ்குமார், கலை இயக்குனர்-ராஜ் கமல், விளம்பர வடிவமைப்பு- சரத் ஜெ. சாமுவேல், மக்கள் தொடர்பு-யுவராஜ்.

இலங்கை வல்வெட்டித்துறையில் ஒரு இலங்கை தமிழ் குடும்பம் தர்மதாஸ் (சசிகுமார்), அவரது மனைவி வசந்தி (சிம்ரன்), மற்றும் அவர்களின் குழந்தைகள் – நிதுஷன் (மிதுன் ஜெய் சங்கர்) மற்றும் முள்ளி (கமலேஷ் ஜகன்) உள்ளனர்.. அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், அவர்கள் தங்கள் வீடு உட்பட அனைத்தையும் விட்டுவிட்டு, இலங்கையிலிருந்து எல்லைகளைத் தாண்டி படகில் ராமேஸ்வரத்திற்கு தப்பித்து வருகிறார்கள். வசந்தியின் சகோதரர் பிரகாஷ் உடன் சேர்த்து அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். காவல்துறையினர் இந்த குடும்பத்தினர் மீது பரிவு காட்டி அவர்களை விட்டுவிடுகிறார்கள். அங்கிருந்து, வசந்தியின் அண்ணன் பிரகாஷ் (யோகி பாபு) உதவியுடன் சென்னையில் உள்ளூர் காவல் ஆய்வாளர் ராகவனுக்கு (பக்ஸ்) சொந்தமான ஒரு குடியிருப்பில் குடியேறி புதிய வாழ்க்கையைத் தொடங்கும் அவர்கள் அங்கு உள்ளவர்களிடம் தாங்கள் ஈழத் தமிழர்கள் என்பதை மறைத்து, சகஜமாக வாழ தொடங்குகிறார்கள். தாஸ் ஒரு ஓட்டுநராக வேலைக்கு சேர்கிறார். இந்நிலையில், ராமேஸ்வரத்தில் நடக்கும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்கிறது. மேலும் சில போலீசார் தாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கையை சேர்ந்தவர்கள் மற்றும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் வந்தவர்கள் என்பதால் அவர்களை சந்தேகிக்கிறார்கள். அந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாஸின் குடும்பத்தைத் காவல்துறையினர் தேடுகிறார்கள். தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் தாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டு வாசலில் வந்து சேர்கிறார்கள், அடுத்து என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

இரக்கம், உதவும் குணம், குடும்பத்தின் மீது பாசம், அப்பாவித்தனம், வலியைச் சுமக்கும் கண்கள், தன்னிடம் பேசாமல் இருக்கும் மகனிடம் உடையும் தருணம், குடும்பத்திற்காக பதறும் காட்சிகளில் சசிகுமார் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

அழகான குடும்பத்தலைவி வசந்தியாக சிம்ரன் மகிழ்ச்சியையும் சோகத்தையும் கச்சிதமாக வெளிப்படுத்தி உள்ளார்.

மூத்த மகனாக மிதுன் ஜெய்சங்கர் அழுத்தமான நடிப்பையும் வழங்கியுள்ளார்.

இளைய மகனாக கமலேஷ் பல காட்சிகளில் சிறுசிறு சேட்டைகள் மூலம் அனைவரின் கவனத்தை கலவாடி பார்வையாளர்களை சிரிப்பலையை பரவசப்படுத்தி உள்ளார்.

யோகி பாபு வரும் அனைத்து காட்சிகளும் நகைச்சுவையால் கவர்ந்துள்ளார்.

எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் (எ) பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலட்சுமி, அபிஷன் ஜீவிந்த், ராம்குமார் பிரசன்னா ஆகியோர் தங்களது இயல்பான நடிப்பால் திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசை, பின்னணி இசை, பரத் விக்ரமன் படத்தொகுப்பு, அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு, கலரிஸ்ட் அருண் சங்கமேஷ்வரன், கலை இயக்குனர் ராஜ் கமல், உட்பட அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களின் எதார்த்தமான பங்களிப்பு கதையோட்டத்திற்கும் பலம் சேர்த்துள்ளது.

தஞ்சம் தேடி அகதிகளாக வரும் மக்களிடம் சோகமும் உணர்ச்சியும் கலந்திருக்கும். அதுவும், அவர்கள் இலங்கைத் தமிழர்களாக இருந்தால், அது கொஞ்சம் இறுக்கமாக இருக்கும். பொருளாதார மந்தநிலை காரணமாக தங்கள் வீடு உட்பட அனைத்தையும் விட்டுவிட்டு இலங்கையிலிருந்து எல்லையை கடக்கும் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் அவல நிலையையும், மனிதநேயம் எப்படி எல்லாவற்றிற்கும் மேலானது என்பதையும், உணர்ச்சிகரமான தருணங்களை கூட நகைச்சுவையாகவும் வேடிக்கையாகவும் எப்படிச் சொல்ல முடியும் என்பதையும், அன்பை வெளிப்படுத்துவதையும் சித்தரிக்கும் உணர்ச்சிகரமான காட்சிகளுடன் திரைக்கதையை உருவாக்கியதற்காக அறிமுக இயக்குனர் அபிஷான் ஜீவிந்துக்கு பாராட்டுகள்.

மொத்தத்தில் மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மெண்ட் சார்பில் பசிலியான் நசரேத், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கும் டூரிஸ்ட் பேமிலி  ஒரு மனதைத் தொடும் மற்றும் உணர்ச்சிபூர்வமான படம்.