Chennai City News

ஜோஷ்வா இமை போல் காக்க சினிமா விமர்சனம் : ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறிய மற்றும் ஒரு சாதாரணமான க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

ஜோஷ்வா இமை போல் காக்க சினிமா விமர்சனம் : ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறிய மற்றும் ஒரு சாதாரணமான க்ரைம் த்ரில்லர் | ரேட்டிங்: 2.5/5

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், வருண் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’. ராஹேய், கிருஷ்ணா, டிடி, கிட்டி, மன்சூர் அலிகான், விசித்ரா, லிசி ஆண்டனி, நிஷாந்த் ராமகிருஷ்ணன், சாய் சித்தார்த் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு :
இயக்குனர் : கௌதம் வாசுதேவ் மேனன்
தயாரிப்பாளர் : ஐசரி கே.கணேஷ்
ஒளிப்பதிவு : எஸ்ஆர் கதிர் ஐஎஸ்சி
எடிட்டிங் : ஆண்டனி
இசை : கார்த்திக்
கலை இயக்குனர் : குமார் கங்கப்பன்
ஆடைகள் : உத்தாரா மேனன்
பாடல் வரிகள் : மதன் கார்க்கி, விவேக், விக்னேஷ் சிவன், சூப்பர் சுபு, கானா குணா
ஸ்டண்ட் : யானிக் பென்
நிர்வாகத் தயாரிப்பாளர் : கே அஸ்வின் குமார்
வண்ணம் : ஜி பாலாஜி
ஒலி வடிவமைப்பு : சுரேன் ஜி மற்றும் அழகிய கூத்தன்
ஒலி கலவை : சுரேன் ஜி
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, நாசர், டிஒன்

ஒரு உயர்மட்ட போதைப்பொருள் வழக்கிற்காக நியூயார்க்கில்; இருந்து சென்னைக்கு வரும் ஒரு பெண் வழக்கறிஞரை கவனித்து பாதுகாக்க வேண்டிய மெய்க்காப்பாளர் கதை. ஜோஷ்வா (வருண்) என்ற மிகத் திறமையான ஒரு புரொஃபஷனல் கில்லர் வழக்கறிஞர் குந்தவியை (ராஹேய்) காதலிக்கிறார். குந்தவி தனது தந்தை தங்கியிருக்கும் நியூயார்க்குக்கு செல்லும் போது ஏர்போர்ட்டில், ஜோஷ்வா தான் ஒரு புரொஃபஷனல் கில்லர் என்றும், மேலும் அத்துடன் குந்தவிக்காக இனி அந்த தொழிலை கைவிடுவதாக கூறுகிறான். தன் காதலன் ஜோஷ்வா ஒரு புரொஃபஷனல் கில்லர் என்று கேட்டு அவள் அதிர்ச்சி அடையும் போது அங்கு ஒரு கும்பல் ஜோஷ்வாவை தாக்குகிறார்கள். ஜோஷ்வா வெறித்தனமாக எதிர் தாக்குதல் செய்கிறார். அந்த நேரத்தில் குந்தவை நியூயார்க்குக்கு செல்கிறார். காதலிக்கு  உறுதியளித்தபடி ஜோஷ்வா ஒரு உயரடுக்கு மெய்க்காப்பாளராக முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பை வழங்க ஒரு உயர் பாதுகாப்பு நிறுவனம் நடத்துகிறார். இதனிடையே, குந்தவை; ஒரு மெக்சிகன் போதைப்பொருள் மாஃபியாவிற்க்கு எதிராக நியூயார்க்கில் உள்ள வழக்கறிஞர் குழுவில் ஒரு முக்கியமான வழக்கறிஞர் ஆவார். அமெரிக்க நீதிமன்றத்தில் உலகத்தையே கலக்கும் ஒரு மெக்சிகன் போதைப்பொருள் கடத்தல் தலைவருக்கு எதிரான ஒரு முக்கியமான வழக்கைக் கையாளும் குந்தவியை கொல்ல சதி நடக்கிறது. வழக்கு சம்பந்தமாக சென்னை வரும் குந்தவியைக் சக்திவாய்ந்த மெக்சிகன் போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து அவளைப் பாதுகாக்கும் பணி ஒதுக்கப்படுகிறது. ஜோஷ்வா குந்தவியை கொல்ல முயற்சிக்கும் மோசமான கும்பலிடமிருந்து அவளைப் பாதுகாக்க அவளுடைய காதலன் மட்டுமல்ல, மெய் காப்பாளராகவும், குந்தவியின் உயிரைக் காக்க எந்த எல்லைக்கும் செல்ல அவன் தயாராக இருக்கிறான். அதன் பின் பல கேள்விகளுக்கு மீதிக்கதை பதில் சொல்கிறது.

கிராப் தலை, கையில் துப்பாக்கி என கம்பீர தோற்றத்துடன் ஒரு புரொஃபஷனல் கில்லர் ஜோஷ்வா கதாபாத்திரத்தில் வருண் அசாதாரண ஸ்டண்ட் காட்சிகளில் அதிரடி காட்டி பார்வையாளர்களை கவர்ந்தாலும் அவரது நடிப்பில் அழுத்தம் இல்லை, குறிப்பாக வருணிடம் காதல், நடனம் மற்றும் உணர்ச்சிவசப்படும் காட்சிகளில் அவரது நடிப்பு திறமை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

படத்தில் குந்தவை கதாபாத்திரம் சுற்றி திரைக்கதை சூழல்கிறது. ராஹேய் காதல், பயம், பதற்றம் என அனைத்து வெளிப்பாடுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தி உள்ளார்.

கோட்டி கதாபாத்திரத்தில் கிருஷ்ணா சிறப்பு தோற்றத்தில் தனக்கு உண்டான ஸ்டைலில் கவனத்தை ஈர்க்கிறார்.

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் ஜேம்ஸ் பாண்ட் உயர் அதிகாரி மற்றும் பிரிட்டிஷ் இரகசிய புலனாய்வு சேவையின் தலைவராக வரும் மிஸ் மனிபென்னி, கதாபாத்திரம் போலவே மாதவி கதாபாத்திரம் அமைந்துள்ளது.  திவ்யதர்ஷினி அந்த பாத்திரத்திற்கு ஒரு திடமான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

லிசி ஆண்டனி, நிஷாந்த் ராமகிருஷ்ணன், சாய் சித்தார்த், கிட்டி, மன்சூர் அலிகான், விசித்ரா, உட்பட அனைத்து துணை நட்சத்திரங்கள் எதார்த்தமான நடிப்பை வழங்கி திரை இருப்பை உறுதி செய்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக, மதன் கார்க்கி, விவேக், விக்னேஷ் சிவன், சூப்பர் சுபு, கானா குணா ஆகியோரின் பாடல் வரிகளுக்கு கார்த்திக்கின் மெல்லிய இசை மற்றும் விறுவிறுப்பை ஏற்படுத்தும் பின்னணி இசையும், ஒவ்வொரு காட்சியின் அழகையும் க்ரைம் த்ரில்லருக்கான தீவிரத்தையும் காட்சி படுத்திய கதிரின் ஒளிப்பதிவும், ஹாலிவுட் தரத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும் யானிக் பென்னின் அதிரடி காட்சிகள், ஒரு அதிரடியான தொடக்கத்தை தந்து கடைசி வரை அந்த வேகத்தை சரியாக வைத்திருந்த எடிட்டர் ஆண்டனியின் படத்தொகுப்பும் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.

வழக்கமான கதைக்களத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தனக்கே உண்டான அதே ஸ்டைலில் பாண்ட் சூட் அணிந்த கதாநாயகன், உணர்வுப்பூர்வமான காதல் காட்சிகள், பரபரப்பான ஆக்ஷன் காட்சிகள், கேமரா கோணங்கள் என அனைத்தையும் இணைத்து யூகிக்கக்கூடிய சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை அமைத்து ஒரு சாதாரணமான க்ரைம் த்ரில்லர் வழங்கி  உள்ளார்.

மொத்தத்தில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கும் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறிய மற்றும் ஒரு சாதாரணமான க்ரைம் த்ரில்லர்.

Exit mobile version