அமிகோ கேரேஜ் சினிமா விமர்சனம் : அமிகோ கேரேஜ் வாழ்க்கையில் சரியான தேர்வுகளை மேற்கொள்வது பற்றிய சமூக செய்தி சொல்லும் ஒரு நடுநிலையான கேங்க்ஸ்டர் கதை | ரேட்டிங்: 2.5/5
நடிகர்கள் :
ருத்ராவாக ‘மாஸ்டர்’ மகேந்திரன்
ஆனந்தாக ஜி.எம்.சுந்தர்
ஆதிரா தமிழாக
ரம்யாவாக தீபா பாலு
குருவாக தசரதி
முத்துவாக முரளிதரன் சந்திரன்
சிரிக்கோ உதயா
மதன் கோபால்
சக்தி கோபால்
முரளி கமல்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு – முரளி ஸ்ரீனிவாசன் (பீப்பிள் புரொடக்ஷன் ஹவுஸ்) ஸ்ரீ ராமச்சந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஸ்வின் குமார் விஜி இணைந்து தயாரித்துள்ளனர்.
இயக்குனர்: பிரசாந்த் நாகராஜன்
எடிட்டர்: ரூபன் – சிஎஸ் பிரேம்குமார்
ஒளிப்பதிவு: விஜயகுமார் சோலைமுத்து
இசை: பாலமுரளி பாலு
கலை: ஸ்ரீமான் பாலாஜி
ஸ்டண்ட்: டான் அசோக்
பாடல் வரிகள்: கு. கார்த்திக்
தயாரிப்பு நிர்வாகி: எஸ்.ஆர்.லோகநாதன்
விளம்பர வடிவமைப்பு: சபா வடிவமைப்புகள்
வெளியீடு : ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஷ்
மக்கள் தொடர்பு : சதீஷ் (எய்ம்)
ருத்ரா கதாபாத்திரத்தில் மகேந்திரன் கோபக்கார இளைஞராக, சண்டை, எமோஷனல் என அனைத்தும் சிறப்பாக வெளிப்படுத்தி தனது நடிப்புத் திறமையை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
தமிழாக ஆதிரா கதாபாத்திரம் பெரிதாக சித்தரிக்கப்படவில்லை என்றாலும் முழுக்க அவரது திரை இருப்பு இருக்கிறது.
கேங்ஸ்டர் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜி.எம்.சுந்தர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நடித்துள்ளார்.
ரம்யாவாக தீபா பாலு, குருவாக தசரதி, முத்துவாக முரளிதரன் சந்திரன், சிரிக்கோ உதயா, மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் என அனைத்து துணை கதாபாத்திரங்கள் நேர்த்தியான நடிப்பு வழங்கி திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.
கேங்ஸ்டர்கள் கதையில், சாதாரண வாழ்க்கையிலிருந்து கேங்ஸ்டராக மாறும் ஒரு இளைஞனின் கேங்ஸ்டர் வாழ்வை சுற்றிய பயணமாக திரைக்கதை அமைத்து சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குனர் பிரசாந்த் நாகராஜன். திரைக்கதையில் இயக்குனர் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் பார்வையாளர்களை எளிதில் கவர்ந்திருக்கும்.
மொத்தத்தில் முரளி ஸ்ரீனிவாசன் (பீப்பிள் புரொடக்ஷன் ஹவுஸ்) ஸ்ரீ ராமச்சந்திரன் பெருமாள், பிரியா கதிரவன், அஸ்வின் குமார் விஜி இணைந்து தயாரித்து ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஷ் வெளியிட்டுள்ள அமிகோ கேரேஜ் வாழ்க்கையில் சரியான தேர்வுகளை மேற்கொள்வது பற்றிய சமூக செய்தி சொல்லும் ஒரு நடுநிலையான கேங்க்ஸ்டர் கதை.