ஹிட் லிஸ்ட் சினிமா விமர்சனம் : ஹிட் லிஸ்ட் எதார்த்தமான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் | ரேட்டிங்: 3.5/5
நடிகர்கள் :
சரத்குமார், விஜய் கனிஷ்கா (அறிமுகம்), ராமச்சந்திர ராஜு (கே.ஜி.எஃப்-கருடா ராம்), சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அபி நக்ஷத்ரா, அனுபமா குமார், முனீஷ்காந்த், ராமச்சந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பாலசரவணன்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
தயாரிப்பு : ஆர்.கே.செல்லுலாயிட்ஸ்
தயாரிப்பாளர் : கே.எஸ்.ரவிக்குமார்
இணைத்தயாரிப்பு : ஆர்.ஜி.சி-ரமேஷ் கிராண்ட் கிரியேஷன்ஸ்
இயக்கம் : சூர்யகதிர் காக்கல்லர் – கே.கார்த்திகேயன்
இசை : சி.சத்யா
ஒளிப்பதிவு : கே.ராம்சரண்
படத்தொகுப்பு : ஜான் ஆபிரகாம்
திரைக்கதை-வசனம் : சூர்யகதிர் காக்கல்லர்
கதை : எஸ்.தேவராஜ்
கலை : அருண்சங்கர் துரை
சண்டைப் பயிற்சி : விக்கி – ஃபீனிக்ஸ் பிரபு
பாடல் வரிகள் : கார்த்திக் நேத்தா
ஒலி வடிவமைப்பு : லக்ஷ்மிநாராயணன்.ஏ.எஸ்
ஆடை வடிவமைப்பு : கவிதா.ஜே
ஆடைகள் : வி.மூர்த்தி
ஒப்பனை : கோதண்டபாணி
படங்கள் : விஜய்
விளம்பர வடிவமைப்பு : தினேஷ் அசோக்
தயாரிப்பு நிர்வாகி : ஜே.வி.பாரதி ராஜா
மக்கள் தொடர்பு : ரியாஸ்.கே.அஹ்மத்
அனுபவம் வாய்ந்த நடிகராக விஜய் கனிஷ்கா முதல் படத்திலேயே வியக்கத்தக்க வகையில் உடல் மொழியில் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய விதம் அருமை. ஒரு கார்ப்பரேட் ஊழியராக இருந்து இரக்கமற்ற கொலையாளியாக மாறும் தருணங்களிலும் அவரது கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சண்டைக் காட்சிகளில் தூள் கிளப்பியுள்ளார். தமிழ் சினிமாவுக்கு ஒரு இளம் ஹீரோ கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஹாட்ஸ் ஆஃப் விஜய் கனிஷ்கா.
முரட்டுத்தனமான ஏசிபி யாழ்வேந்தன் கதாபாத்திரத்தில் சரத்குமார் கச்சிதமாக பொருந்தி மிடுக்காக வலம் வந்து அலட்டல் இல்லாமல் ஒரு நேர்மையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
கதையின் முக்கிய கேரக்டரில் சிறிது நேரம் வரும் ஸ்ம்ருதி வெங்கட், தன் இருப்பை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
ராமச்சந்திர ராஜு (கே.ஜி.எஃப்-கருடா ராம்), சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அபி நக்ஷத்ரா, முனீஷ்காந்த், அனுபமா குமார், ராமச்சந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பாலசரவணன் உட்பட அனைவரும் தங்கள் ஏற்று இருக்கும் கதாபாத்திரத்தில் தனித்து நின்று ஈர்க்கக்கூடிய நடிப்பை வழங்கி சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளனர்.
இசை : சி.சத்யா, படத்தொகுப்பு : ஜான் ஆபிரகாம், திரைக்கதை-வசனம் : சூர்யகதிர் காக்கல்லர், கலை : அருண்சங்கர் துரை, பாடல் வரிகள் : கார்த்திக் நேத்தா, ஆடை வடிவமைப்பு : கவிதா.ஜே, ஒலி வடிவமைப்பு : லக்ஷ்மிநாராயணன்.ஏ.எஸ், ஆடைகள் : வி.மூர்த்தி, ஒப்பனை : கோதண்டபாணி ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் தேவையான சஸ்பென்ஸை உருவாக்க உதவி உள்ளது அவர்கள் உழைப்பு.
அதேபோல், அபாரமான காட்சி கோணங்களை உருவாக்கிய ஒளிப்பதிவாளர் கே.ராம்சரண், எதார்த்தமான ஆக்ஷன் காட்சிகளை உருவாக்கிய விக்கி – ஃபீனிக்ஸ் பிரபுவின் பணி ரசிகர்களால் பாராட்டப்பட்டு ரசிக்கப்படும்.
சமூக செய்தி மற்றும் உணர்வுபூர்வமான கதையின் அடிப்படையில் ஒரு சரியான சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் திரைக்கதையில் புகுத்தி விறுவிறுப்பான பல திருப்பங்களுடன் இயக்கி உள்ளனர் சூர்ய கதிர் காக்கள்ளார் மற்றும் கார்த்திகேயன்.
மொத்தத்தில் ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் சார்பில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்திருக்கும் ஹிட் லிஸ்ட் எதார்த்தமான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர்.