வீர தீர சூரன் பாகம் 2 சினிமா விமர்சனம் : வீர தீர சூரன் பாகம் 2 வித்தியாசமான கதைகளத்துடன் புதிய முயற்சியில் பழி வாங்க துடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர் | ரேட்டிங்: 3.5/5
எச்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு, மும்தாஜ்.எம் தயாரித்திருக்கும் வீர தீர சூரன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.யு.அருண்குமார்.
இதில் சீயான் விக்ரம்- காளி, எஸ்.ஜே.சூர்யா- அருணாகிரி, சுராஜ் வெஞ்சரமுடூ – கண்ணன், துஷாரா விஜயன்-கலைவாணி, மாருதி பிரகாஷ்ராஜ் – பெரியவர், பாலாஜி-வெங்கட், ரமேஷ் இந்திரா-பெரியப்பா, மாலா பார்வதி- பெரியவர் மனைவி, ஸ்ரீஜா ரவி- அம்மா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-தேனி ஈஸ்வர், இசை-ஜி.வி.பிரகாஷ்குமார், படத்தொகுப்பு-பிரசன்னா ஜி.கே, கலை- சி.எஸ்.பாலசந்தர், சண்டை – பீனிக்ஸ் பிரபு, வெளியீடு- 5ஸ்டார் செந்தில், மக்கள் தொடர்பு – யுவராஜ்.
எஸ்.ஜே. சூர்யா, எஸ்பி அருணகிரியாக நடிப்பில் அச்சுறுத்தலையும் விரக்தியையும் சமநிலைப்படுத்துகிறார்.
காளியின் மனைவி கலைவாணியாக துஷாரா விஜயன் ஒரு திடமான தோற்றத்தை ஏற்படுத்துகிறார். அவரது கதாபாத்திரம் காளியின் பயணத்திற்கு ஆழத்தை சேர்க்கிறார்.
சுராஜ் வெஞ்சரமுடூ – கண்ணன், மாருதி பிரகாஷ்ராஜ் – பெரியவர், பாலாஜி – வெங்கட், ரமேஷ் இந்திரா – பெரியப்பா, மாலா பார்வதி – பெரியவர் மனைவி, ஸ்ரீஜா ரவி – அம்மா உட்பட அனைவரும் நேர்த்தியான நடிப்பை வழங்கி உள்ளனர்.
வழக்கமான பழிவாங்கும் கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து அதில் குடும்பம், சென்டிமென்ட்டை கலந்து படத்தின் தொடக்கத்திலிருந்தே, கதையை ஈர்க்கும் வகையில் இயக்குனர் எஸ்.யு. அருண் குமார் மேற்கொண்ட முயற்சி மிகவும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், ஒரே இரவில் நடக்கும் முழு கதையில் தீவிரத்தை உருவாக்க அவர் திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
மொத்தத்தில் எச்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு, மும்தாஸ்.எம் தயாரித்திருக்கும் வீர தீர சூரன் பாகம் 2 வித்தியாசமான கதைகளத்துடன் புதிய முயற்சியில் பழி வாங்க துடிக்கும் ஆக்ஷன் த்ரில்லர்.