Site icon Chennai City News

ல் தக சையா விமர்சனம் : ல் தகா சைஆ கனவில் வாழும் ஏழையின் கதை | ரேட்டிங்: 2/5

ல் தக சையா விமர்சனம் : ல் தகா சைஆ கனவில் வாழும் ஏழையின் கதை | ரேட்டிங்: 2/5

கப்பில் கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் காதல் தம்பதிகள் சதா நாடார் மற்றும் மோனிகா செலேனா தயாரித்து இயக்கி நடித்த முதல் தமிழ் திரைப்படம் ல் தகா சைஆ.

படத்திற்கு ஒளிப்பதிவு எம் எஸ் மனோகுமார்.இசை ஈ ஜே. ஜான்சன்,படத்தொகுப்பு பரணி செல்வம். பாடலாசிரியராக க .சுதந்திரன், பேக்ரவுண்ட் மியூசிக் சுரேஷ் ஷர்மா, பிஆர்ஒ-சக்தி சரவணன்.

காதல் தம்பதி ராம் மற்றும் ரம்யா ஆகிய இருவரின் வாழ்க்கையில் கனவால் விபரீதங்கள் நிகழ்கிறது. ராம் கனவு காண்பது எல்லாம் நிஜத்தில் நடக்கிறது. மனைவி தாய்மை அடைவது போலவும், ஒரு பிரச்சனையில் சிக்கும் ராம் அதிலிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சி, பின்னர் மனைவி இறப்பது போலவும் கனவு காண அன்றிலிருந்து மனஉளைச்சல் ஏற்பட்டு தனிமையில் வாடுகிறார். இறுதியில் ராம் கண்ட கனவு நிஜமா? கனவில் வருவதை எப்படி சமாளிக்க போராடுகிறார்? மனைவிக்கு நடந்தது என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

திரையில் மட்டுமல்ல நிஜத்தில் கணவன் மனைவி சதா நாடர் – மோனிகா செலேனா ஆகிய இருவரும் நெருக்கமும், இளமை துள்ளலுடன் நடித்துள்ளனர். மற்றும் பலர் புதுமுகங்கள் பக்கமேளங்கள்.

ஒளிப்பதிவு எம் எஸ் மனோகுமார், இசை ஈ ஜே. ஜான்சன், படத்தொகுப்பு பரணி செல்வம், பாடலாசிரியராக க .சுதந்திரன், பின்னணி இசை சுரேஷ் ஷர்மா ஆகியோரின் முயற்சி பரவாயில்லை ரகம்.

கனவும், நிஜமும் கலந்து கணவனின் தவிப்புக்களையும், போராட்டங்களையும் மையப்படுத்தி வித்தியாசமான படைப்பாக கொடுக்க நினைத்து இறுதியில் திருப்பம் என்ற பெயரில் சப்பென்று முடித்திருக்கிறார் இயக்குனர் சதா நாடார்.

மொத்தத்தில் கப்பில் கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் காதல் தம்பதிகள் சதா நாடார் மற்றும் மோனிகா செலேனா தயாரித்திருக்கும் ல் தகா சைஆ கனவில் வாழும் ஏழையின் கதை.

 

Exit mobile version